பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - . . நாற்பெரும் புலவர்கள் இவனது பெரும் புகழ் தமிழ்நாடெங்கும் பரவியது. நமது புலவர் பெருமானாகிய கபிலர் இவனைக் காண ஆவலுற்றார்; திருக்கோவலூரை அடைந்தார். காரியும் கபிலரை வரவேற்று, அவர் மனங்களிக்கப் பரிசில் நல்கினான். புலவர், உள்ளத் தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேரு வகை கடல்போல் பொங்க, அவனைப் பற்பல வாறு புகழ்ந்து மகிழ்ந்தார். அவர் அவனை நோக்கி, "பெரிய வண்மையை யுடையவ தலைவ! ஒரு திசைக்கண் வள்ளியோனா கிய ஒருவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின் மாக்கள் பலரும் வருவர்; அவர் வரிசை யறிதல் அரிது; கொடுத்தல் மிக எளிது; நீ அவ் வரிசை அறிதலை நன்றாக அறிந்தாயாதலின், அறிவுடையோரிடத்து வரிசை கருதாது ஒருபடியா கப்பார்த்தலைத் தவிர்வாயாக.வீரக்கழல் அணிந்த இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி நினது நாடு கடலாற் கொள்ளப்படாது; அதனைக் கொள்ளுதற்குப் பகைவரும் மேற். கொள்ளார். அது, வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப் பாருடையது. கெடாத செல்வத்தினையும் வென்றி பொருந்திய படையையும் உடைய மூவேந்தருள் ஒருவனுக்குத் துணையாக வேண்டுமென்று, அம் மூன்ர்பால் நின்றும் வந்தோர் தனித்தனி நினக்குத் தந்த பொருள், உனது அடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையது.