பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை

எங்கள் குடும்பத் தலைவரான எழுத்தாளர் சு. சமுத்திரத்திற்கு, ஏகலைவனை மிகவும் பிடிக்கும்.

அவன் கட்டைவிரல் வஞ்சகமாய் வெட்டப்பட்டதை அடிக்கடி, சொல்லிச் சொல்லி கொதித்துப் போகிறவர். “மகா பாரத” அர்ச்சுனனைத்தான் இன்றளவும் மாவீரன் என்கிறார்கள். “வில்லுக்கு விஜயன்” என்ற பழமொழியே இந்த வியப்பால் ஏற்பட்ட ஒன்று. ஆனால் இந்த வில்லாளி விஜயனோ வேடச் சிறுவனான ஏகலைவன், தன்னைவிட மிகப் பெரிய வில்லாளியாக விளங்குவதை நேரடியாகப் பார்த்து பொறாமையில் புழுங்கி, துரோணாச்சாரியாரைத் துண்டிவிட்டு அவன் கட்டை விரலை வெட்ட வைத்தவன். ஆக அர்ச்சுனனின் உலகறிந்த வீரம் ஒரு மாபெரும் சதியில் முளைத்த சோரம்.

இன்று மலைமக்கள் தங்களின் கட்டை விரல்களை தாமாகக் கொடுக்கவில்லை என்றாலும், அந்த விரல்கள் பலவந்தமாக வெட்டப்படுகின்றன. தலித் தோழர்கள் முன்னேற வேண்டிய அளவிற்கு முன்னேறவில்லை என்றாலும், ஓரளவு முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் மலை மக்களின் கட்டை விரல்கள், இன்னும் முஷ்டிகளாகவில்லை.

எங்கள் நோக்கமும், சு. சமுத்திரத்தின் நோக்கமும், எங்கள் முன்னோரான ஏகலைவனைப்