பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

71

கொள்ளத் துவங்கினார்கள். பிரபல கவிஞர் சித்தலிங்கைய்யா என்னைப் பற்றி கேள்விப்பட்டு அடிக்கடி என்னைப் பார்ப்பதற்காகவே, அலுவலகம் வந்தது, கன்னட ஊழியர்களிடையே என் மீது அன்பை ஏற்படுத்தியது. ஆனாலும், ஒரு ஆசாமி, அவர் டெப்த்திரி - அதாவது பியூனிற்கும், கிளார்க்கிற்கும் இடையிலான அபாயப் பதவி. இந்த ஆசாமி நன்கு விவரம் தெரிந்தவர். எல்லா அலுவலகர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு தலைமை அதிகாரிகளை ஆட்டிப் படைத்தவர். அவர்களை தப்புகள் செய்யத் துாண்டிவிட்டு, அந்த தப்புகளாலேயே அவர்களை அடிப்பவர். இவரது வேலை பைல்களை எடுத்து வைப்பது. ஆனாலும் சட்டையில் ஒரு தூசு படாமல் இருப்பவர். ஒரு தடவை, எங்கள் அலுவலகக் கட்டிடத்தை மாற்றும்போது வேலை செய்ய வேண்டியது இருக்கும் என்பதற்காக விடுப்பெழுதிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். இது வேண்டும் என்றே செய்ததென்பதால், நான் மெடிக்கல் சர்ட்டிபிகேட் கேட்டேன். அவர் திரும்பி வந்த பிறகு. அந்த சர்டிபிகேட்டை கொடுக்காதது மட்டுமல்ல, ஏன் கொடுக்க இயலவில்லை என்று கூடச் சொல்லவில்லை. ஆகையால், நான் அவரது விடுப்புக்கால சம்பளத்தைப் பிடித்தேன். உடனே அவர் டில்லியில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு தந்தி அடித்தார். பொதுவாக, மேல் அதிகாரிகள் ஒரு பிரச்சினையின் நியாய அநியாயத்தைப் பார்க்காமல், பிரச்சினையே இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள். கொலை செய்தால் கூட அவர்கள் சம்மதிப்பார்கள். ஆனால் அது பிரச்சனையாகக் கூடாது. இந்த மனோபாவம் உள்ள டில்லி மேலதிகாரிகள் அவரது