பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

27

கந்தசாமி என்ற அரிசனப் பையன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். மத்தியானம் நாங்கள் ஒன்றாகச் சாப்பிடுவது உண்டு. ஒருநாள் எனது உணவு டப்பா அவனிடமும், அவனுக்குரியது என்னிடமும் எப்படியோ மாறிவிட்டது. நான் அவனது உணவு டப்பாவைப் பிரித்து எடுத்து உண்டுவிட்டேன். பிறகுதான் இது “அரிசனனுக்குரியது” என்பதை உணர்ந்து முகம் சுளித்தேன். உடனே அந்த கந்தசாமி விஷயத்தைப் புரிந்து கொண்டு, இன்னும் திறக்காத என் உணவு டப்பாவை என்னிடம் நீட்டிவிட்டு, நான் எச்சில் படுத்திய தனது டப்பாவை வாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காதது போல் சாப்பிடத் துவங்கினான். நான் வெட்கித் தலை குனிந்தேன். அன்று முதல் நாங்கள், தோழர்களாக இருந்தோம். இளமையிலேயே தாய் தந்தையை இழந்த எனக்கு பல்வேறு வித இன்னல்கள். அப்போது ஆறுதல் சொன்னவர்கள், ஆற்றுப்படுத்தியவர்கள் பெரும்பாலும் சேரித் தோழர்களே.

சித்தியின் போராட்டம்

இப்படி பல்வேறு நினைவுகள் ஏரிக்கரை மேல் உள்ள பயணிகள் விடுதியில் தங்கியிருந்த எனக்கு நினைவுக்கு வந்தன. அந்தச் சமயத்தில் என் சித்தி திருமதி. ராசம்மா சொந்தக் கிராமத்தில் நடத்திவந்த போராட்டம் நினைவுக்கு வந்தது. இவர் எனது அம்மாவின் தங்கை. எனது தந்தையின் தம்பியான திரு. பாண்டி நாடாருக்கு என் நலன் கருதி திருமணம் செய்து வைக்கப்பட்டார். சித்தப்பா வட சென்னையில் கோணி வியாபாரம் செய்தார். நான் இவர்களுடன்