பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சு. சமுத்திரம் ☐

நடத்தியிருந்தால், இதற்கென்று இருந்த இடதுசாரி வாசர்கள் மத்தியில் இன்றும் அது கம்பீரத்துடன் உலா வந்து கொண்டிருக்கும். ஆனால் வாசகர் சந்திப்புக்கள் என்ற அதிகப்பிரசங்க செலவுகள் இந்த இதழை சந்திக்கு கொண்டு வந்து இறுதியில் அதன் குரல்வளையை நெறித்துவிட்டன. நான் எழுதிய “கேள்வித்தீயும்” பொன்னிலன் எழுதிய “கொள்ளைக்காரர்கள்” குறுநாவலும் இதற்கென்று இருந்த வாசர்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. ஆனாலும் ‘டூ லேட்’. அழகியல்வாதிகள் என்று கருதப்படுபவர்களுக்கு இது ‘டூ லெட்’ செய்யப்பட்டதால் கடைசியாக எழுதிய எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் கல்பனா ஒரு அற்புதமான முயற்சி.

இவர்களின் உலகம்

‘இந்தியா டுடே’யில் அதன் ஆசிரியர் திரு. மாலன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு சிறுகதை எழுதப்போனேன். வழக்கம்போல் கடற்கரையில் உட்கார்ந்து சிந்தித்தேன். முன்பு பஞ்சாயத்து விஸ்தரிப்பு அதிகாரியாக பார்த்த ஆட்சித் தலைவரை, மாவட்ட அதிகாரிகளின் பார்வையில் பார்த்தேன். பல்வேறு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. பொதுவாக மாவட்ட நிர்வாகம் செக்குமாடு மாதிரி ஆட்சித் தலைவரையே சுற்றிச் சுற்றிவரும். செகரட்டேரியட்டில் டெப்புடி செகரட்டிரிகளாக கிடக்கும் தூங்குமூஞ்சிகள் கூட மாவட்ட கலெக்டராகி மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்களாகி சக்கைபோடு போடுவார்கள். அண்மையில்கூட ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நான் போயிருந்தபோது, ஆட்சித் தலைவர்