பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் 87 பொங்க அகமலர முகம் மலர்ந்தான்; புலவர் களோடு சென்று பொற்கிழியை அறுக்க முயன் றான். அவ்வமயம் அவ்வழியே போந்த நக்கீரர். அவனைத் தடுத்து, அவன் கொணர்ந்த செய்யுளை படித்து, "அது.பொருட்குற்ற முடையது; நீ பொற் கிழி பெற அருகனல்லை; செல்க' எனச் செப்பி விட்டனர். பாவம்! தருமி என் செய்வான்! கைக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே! என்று ஏங்கிச் சொக்கேசர் சந்நிதியை அடைந்தான்; அடைந்து, "பெரும! நினது கொழுவிய பாடலுக் குத் தலைமைப் புலவனாம் நக்கீரன் குற்றங் கூறினான். இதனை என்னென்பது! நீ எழுதிய கவிக்கே இங்ங்னம் குற்றங் காண்பானாயின், வேறு யார் எழுதினும் அது குற்றமுடையதென்று அவன் கூறத் தடை யாது? நீ சென்று அவனை வாதில் வென்று உனது பெருமையை நிலை நாட்டாது ஒழிவையேல், உன்னை மதிப்பார் ஒருவரும் இரார்' என்று கூறிப் போந்தான். * செஞ்சடைக் கடவுள் சினங் கொண்டான். உடனே புலவர் கோலத்துடன் தன் கோயிலை ட்விட்டுப் புறப்பட்டுச் சங்க மண்டபத்தை அடைந்த னன். அடைந்து ஆண்டிருந்த புலவர்களை நோக்கி, "எமது கவிக்குக் குற்றங் கூறியவர் யாவர்?’ என்ற னன். நக்கீரர், "யானே உமது கவிக்குக் குற்றங். கூறியவன்" என்றார். "குற்றம் யாது?" என்று அண்ணல் வினவினான். நக்கீரர், 'கூந்தற்கு இயற்கையில் மணமில்லை; செயற்கையால் ம்ண