பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - நாற்பெரும் புலவர்கள் நங்கை ஒருத்தியை நாடி மணந்துகொள்ள விரும்பு கின்றேன். அரசன் கருத்தை உணர்த்தி. ஐயத்தைப் போக்கும் செய்யுள் ஒன்றினை எனக்குத் தருவா யாயின், அப் பொருளைப் பெற்றுக் கடிமணம் செய்து வாழ்வேன். என் விருப்பத்தை நிறை. வேற்றுக’ என்று வேண்டி நின்றான். அவ்வமயம் அடியார்க்கு எளிய இறைவன் அகமகிழ்ந்து, தருமியின் துயரைப் போக்க முன் வந்து பூந்தேனை ஆராயும் வாழ்க்கையோடு கூடிய அழகிய சிறகையுடைய வண்டே இச்சகம் பேசாது நீ (உண்மையாய்க்) கண்டறிந்ததைச் சொல்; நெருங்குதல் பொருந்திய நட்பினையும் மயிலனது சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப்போல நறுமண முள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ அறிந்த பூக்களில்?” என்ற பொருளை அமைத்து, உளவியல் பாடல் ஒன்றினை இயற்றித் தந்தனர். தருமி பெருவியப்புடன் அதனைப் பெற்றுச் சங்கப் புலவர்களிடங் காட்டினன். புலவர்கள் அச் செய்யுளின் விழுமிய சொற்சுவை பொருட் சுவையைக் கண்டு, பேரானந்தமுற்று, அரசனை அண்மி அவனுக்குப் பொருள் கூறினர். செய்யுளின் பொருள் ந்யத்தில் ஈடுபட்ட மன்னவன் மன. மகிழ்ந்து, "என் ஐயம் ஒழிந்தது; தருமி பொற்கிழி பெறுக' என்று கூறி விட்டனன். - . . . அந்தணாளன் உள்ளத்தில் ஒருவராலும் கரை செய்ய அரியதொரு பேருவகை கடல் போல்: