பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ο மேடம் கியூரி தெருவில் யார் யார் போலிஷ் நாட்டைச் சேர்ந்த வர்களோ, யார் யார் ரஷிய மொழியினைப் படிக்காமல் போலந்து மொழியைப் படிக்கிறர்கள் என்று சந்தேகப்படும் படி நடந்து கொள்கிருர்களோ அவர்களுக்கெல்லாம், ஈயக் குண்டுகள் சவுக்கின் நுனியில் கட்டப்பட்டு சுழற்றிக்கொண்டு வரும் ரஷிய ராணுவ வீரர்களால் கசையடி கொடுக்கப் பட்டது. அதில் சிலர் மடிந்தார்கள். சிலர் பயங்கரக் காடு. களுக்குத் துரத்தப்பட்டார்கள். காரணம், எந்த மக்கள் போலந்து நாட்டில் பிறந்தார்களோ அவர்கள் மறைவாகக் கூட தாய்மொழியைப் படிக்கக்கூடாது. ஏனெனில், தன் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் போலந்து மக்கள் ரஷிய மொழியைத்தான் படித்துத் தீரவேண்டும். இந்த அளவுக்கு. ரஷிய சர்வாதிகாரம், ஜார் ஆட்சியின் கீழ் த8லவிரித்தாடிய நேரம். இந்த நெருக்கடியான நேரத்திலேதான் 1867, நவம்பர், ஏழாம் நாள்வார்சாவில் புரபசர் மேரியா ஸ்கோலோ வாஸ்கா என்பவருக்கு மகளாகப் பிறந்தாள் கியூரி என்ற பெண்.