பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் பிறப்பும் வளர்ப்பும் பாண்டிய நாடென்பது மதுரை, இராமநாத புரம், திருநெல்வேலி மாவட்டங்களும் கீழ்க்கரைப் பிரதேசமும் சேர்ந்த நிலப்பரப்பாகும். அதனைப் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு வந்த பழங் குடியினரான பாண்டியர்' என்னும் அரசர்கள் ஆண்டு வந்தார்கள். பாண்டிய நாட்டில் சிறப் புற்ற மலை பொதியம் சிறப்புற்ற நதி வையை, தலைநகர் மதுரை. அந்நகர் பீடுமிக்க மாடங்களை யுடைய பழம்பதியாகும். தமிழ் மொழியைப் பரப்புவான் வேண்டி ஆலவாய்ப் பெம்மானும் செவ்வேளும் உட்பட மாபெரும் புலவர்கள் சங்க மிருந்து தமிழாராய்ச்சி செய்தது அம்மதுரை யிற்றான். . . . . . . வற்றாத வளம் பெற்ற வையைப் பேராற்றின் கரையில் இன்றும் தன் பண்டைப் பெருமை குறை யாது சிறப்புற விளங்கும் அம்மாநகரில், க்டைச் சங்கமிருந்த காலத்தில் பைந்தமிழ்ப் புலவர் ஒருவர்.