பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

       கடைப்பிடித்து வந்தான். உணவுக்காக வேட்டையாடுதல் கால் நடைகளை வளர்த்தல், விவசாயம் முதலிய தொழில்களை அவன் எப்படிக் கற்றக் கொண்டானே, அதே முறையில் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொண்டான்.


     உலகத்திலுள்ள பல சமூகத்தார்களும் ஒவ்வொரு காலத்தில் மேற்சொன்ன முறையில் வாழ்ந்திருக்கிருர்கள். ஒவ்வொரு வகுப்பும் தனியான ப ழக்க வழக்கங்களைப் பெற்றிருக்கின்றது. இவற்றினலேயே கிராம ஜனங்களும்,  வகுப்பினர்களுக்குள்ளும் சகல நடவடிக்கை களும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.' இப்பொழுதுகூடப் பல ஜனங்களுக்குள் எழுத்து மூலமான சட்டமே இல்லை. நாகரிகமடைந்த நம் நாடுகளிலும் நாம் நகரங்களே விட்டுக் கிராமங்களுக்குச் சென்று பார்த்தால், அங்கு ஜனங்கள் பரம்பரையாக வந்த பழக்கங்களை வைத்துக் கொண்டே தங்கள் காரியங்களையும் விவகாரங்களையும் முடித்து வருவதை காணலாம். எழுத்து மூலமான சட்டத்தை அவர்கள் கவனிப்பதில்லை. ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் முதலிய தேசங்' களின் குடியானவர்கள் எழுத்து மூலமான ச ட் டம் என்பதே இன்னது என்பதை அறியார்கள். இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் பெரும்பாலான இடங்களில் நிலைமை அப்படியேயுள்ளது. * - குடியானவர்களுக்கும் அரசாங்கத் திற்கு முள்ள சம்பந்தத்தை நிலைநாட்ட வேண்டிய காலத் தில் கான் சட்டம் தலையிடுகிறது. ஆளுல், அவர்களுக் குள்ளே ஒருவருக்கொருவர் நடந்து கொள்ளவேண்டிய விஷயங்களுக்குப் பழக்கமே வழிகாட்டியாயிருக்கிறது. முற்காலத்தில் மனிதசமூகம் முழுமைக்கும் பழக்கமே வழிகாட்டிவந்தது.