பக்கம்:தம்ம பதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிராமணன் ☐ 89

எல்லாப் பொருள்களையும் தம் ஞான ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார். (5)

386. ஒருவர் பாவத்தை ஒழித்ததால் பிராமணன் என்கிறோம்; சாந்தியில் வாழ்வதால் சமணன் என்கிறோம்; மலங்களை வென்றதால் மலமற்றவன் (ப்ரவ்ராஜிதா) என்கிறோம். (6)

387. பிராமணனை எவரும் தாக்குதல் தகாது; காக்கப் பட்ட பிராமணன் தாக்கியவன் மீது பாய்தலும் தகாது. பிராமணனைக் கொல்வோன் பழிக்கு ஆளாவான் ; அத்தீயோனிடம் கோபத்தைச் செலுத்துவோன் அதிகப் பழிக்கு ஆளாவான். (7)

388. வாழ்க்கையின் இன்பங்களில் மனம் ஆழ்ந்து விடாபடி அடக்குதல் பிராமணனுக்குச் சாமானியமான சிறப்பன்று; எங்கெல்லாம் பற்றவர்களுக்கு ஹிம்சை செய்யும் எண்ணம் அடக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் துக்கம் தொலைந்து போகிறது. (8)

389. மெய், வாய், மனம் ஆகிய மூன்றிலும் அடக்கமுள்ளவனையே நான் பிராமணன் என்று சொல் வேன்.

390. பூர்ண ஞானம் பெற்ற புத்தர் (ஸம்மா ஸம்புத்த) உபதேசித்த தருமத்தை உணர்ந்தவனை, பிராமணன் வேள்வியில் அக்னியை வணங்குவதுபோல் மக்கள் வணங்க வேண்டும். (10)

391. ஒருவன் பிராமணனாவது சடைத்தலையால் அன்று, தன் கோத்திரத்தால் அன்று பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவனே பாக்கியவான். அவனே பிராமணன். (11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/91&oldid=1360008" இலிருந்து மீள்விக்கப்பட்டது