பக்கம்:தம்ம பதம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவா ☐ 83

352. ‘சகல தானங்களையும் தரும தானமே [1] வெல்கிறது; சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும அநுபவம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது. (21)

353. போக வாழ்க்கை மூடனை அழித்துவிடுகின்றது; ஆனால் எதிர்க்கரையை நாடுவோரை அழிப்பதில்லை. மூடன் போக ஆசையால் பிறரால் அழிக் கப்படுவதுபோல் [2] தானே தன்னை அழித்துக் கொள்கிறான். (22)

354. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (23)

355. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத் திற்குத் தீமை துவேஷம்; ஆதலால் துவேஷ மற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும்பயனை அளிக்கும். (24)

356. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை மயக்கம்; ஆதலால் மயக்கம் நீங்கியவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (25)

357. வயல்களுக்குத் தீமை களைகள், மனித வர்க்கத்திற்குத் தீமை இச்சை; ஆதலால் இச்சையற்றவர்களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும். (26)


  1. தருமதானம்-தரும உபதேசம்.
  2. மூடனைப் பிறர் அழிக்கவேண்டியதில்லை. அந்த வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான். ‘மற்றவர்களை அவன் அழிப்பது போல’ என்றும், மற்றவர்களை அவன் அழிப்பதாக எண்ணிக்கொண்டு’ என்றும், பிறன் ஒருவனைக் கொல்வது போல்’ என்றும் இந்த இடத்திற்குப் பொருள் கூறுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/85&oldid=1359922" இலிருந்து மீள்விக்கப்பட்டது