பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. இன்பமும் துன்பமும்



உலக இன்பங்களைக் கண்டு நான் வெறுத்துவிட்டேன். விடங்கொண்ட நாகங்களைப் பார்க்கினும், வானத்திலிருந்து இடிகளைப் பார்க்கினும், காற்றோடு கலந்து பரவும் பெரு நெருப்பைப் பார்க்கினும், நான் இந்த இன்பங்களைக் கண்டு அதிகமாக" அஞ்சுகிறேன்."

                                    **

நிலையற்ற இன்பங்களே நம் உண்மையான இன்பத்தையும்' செல்வத்தையும் கொள்ளை கொள்ளும் சோரர்கள்! இவைகள் யாவும் கானல் நீரே."

                                    **

விறகிட்ட தீயைப்போல, இன்பத் தேட்டம் பெருகிக் கொண்டேயிருக்கும். அதற்கும் ஓய்வுமில்லை, ஒழிவுமில்லை. அதற்கு அடிமைப்பட்டவர்களுக்கு இம்மையிலும் இன்பமில்லை. மறுமையிலும் இன்பமில்லை. '

                                    **

இன்பங்கள் யாவும் நஞ்சுகள். ஆழ்ந்த அறிவுடையோர் இவைகளில் அமுதம் என்று விரும்பலாகாது. இன்பங்கள் சீறிப்பாய்கின்ற சர்ப்பங்கள் இவைகளை அண்டலாகாது.

                                    **

இன்பங்களின் உண்யான நன்மைகளை உணர்ந்தவர் அவைகளைப் பரிகாரங்களாகவே எண்ணுவர். தாகவிடாய்க்குத் தண்ணீர், பசிப்பிணிக்கு உணவு, வாடைக்கும் வெய்யிலுக்கும் வீடு, அம்மணத்த மறைக்க ஆடை - இவ்வாறு ஏற்பட்டுள்ள பரிகாரங்களே நமக்கு இன்பங்களாகத் தோன்றுகின்றன. "

                                    **

உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக்கின்றன. எந்த நேரமும் புன்னகை புரிந்து கொண்டிருக்கும் அரசனும் இங்கில்லை : நேரமும் வேதனையில் வாடிக்கொண்டிருக்கும் அடி மையும் இங்கில்லை "

                                    **

                                                   ப. ராமஸ்வாமி