பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. களியாட்டம் புலன்களை அடக்காமல், உணவில் நிதானமில்லாமல், மடிமையில் ஆழ்ந்து, வீரியம் குறைந்து, இன்பங்களுக்காகவே வாழ்ந்து வருவோனை, வலியற்ற மரத்தைக் காற்று வீழ்த்துவதுபோல, மாரன் முறியடிக்கிறான். '

இந்த உலகம் எப்பொழுதும் எரிந்துகொண்டேயிருக்கையில், இங்கே என்ன சிரிப்பு? இங்கே என்ன களியாட்டம் இருளால் மூடப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் ஒளியைத் தேடுவதில்லை? '

சரக் காலத்தில் காற்றில் பறக்கும் சுரைக்கொடி போன்ற இந்த வெள்ளை எலும்புகளைப் பார்ப்பவனுக்கு என்ன இன்பம் இருக்கிறது'

அஸ்திகளைக் கொண்டு ஒரு மாளிகை கட்டி, ஊனும் உதிரமும் கலந்து சாந்து பூசப்பட்டிருக்கிறது; இதிலே வசிக்கின்றன முதுமையும், மாணமும், கர்வமும், கபடமும், !

மலத்தைத் தின்று வளரும் பெரும் பன்றியைப்போல், ஒருவன் கொழுத்துப் பெருந்தீனியில் பற்றுள்ளவனாகி, நீங்காத சோம்பலிலும் நித்திரையிலும் ஆழ்ந்து, படுக்கையிலே புரண்டு கொண்டிருந்தால், அந்த அறிவிலி திரும்பத் திரும்பப் பிறவியெடுக்க நேரிடுகிறது.

பிக்குகளே! உன்னதமான விநய ஒழுக்கத்தில் இசை என்பது சோகமாக ஓலமிடுதலாகும்; நடனம் என்பது வெறும் பைத்தியமாகும். இந்த ஆரிய (மேலான) ஒழுக்கத்தில், சிரிப்பில் பற்களை வெளியே காட்டுதல் குழந்தைத்தனமாகும். நீங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு, இலேசாகப் புன்னகை செய்தாற் போதும். புத்தரின் போதனைகள்