பக்கம்:வாழ்க்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வாழ்க்கை


அதற்கு ஆராய்ச்சி அறிவு எதுவும் தேவையில்லை மக்களுடைய பெரும்பாலான செயல்களுக்கு அதுவே காரணமாயுள்ளது. அதன் பெயர் தான் வழக்கம்.

வாழ்க்கை என்ன என்பதையே அறியாத மக்களை வழக்கம் முற்றிலும் ஆட்கொண்டு விடுகின்றது. வழக்கத்தைப்பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காலத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி வேறுபட்ட விஷயங்களும் செயல்களும் வழக்கம் என்பதில் அடங்கியிருக்கின்றன. சீன மக்களின் வழக்கம் தம் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தல். முஸ்லிம்களின் வழக்கம் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லுதல். இந்துக்களின் வழக்கம் பிரார்த்தனை செய்தல். இவ்வாறு இடங்களுக்கும் சமூகங்களுக்கும் தக்கபடி வழக்கம் மாறுபட்டிருக்கும். வாழ்க்கை முழுவதற்கும் உரிய செயல்களை வழக்கமே விதித்துவிடுகின்றது. உணவு தயாரித்தல், வீட்டில் பொருள்களை அடுக்கிவைத்தல், குழந்தைகளின் கல்வி, ஜனனம், மரணம், திருமணம் ஆகிய எந்த விஷயத்திற்கும் வழக்கமே வழிகாட்டியாக விளங்குகின்றது. உலகில் பெரும்பாலான மக்கள் அதையே பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களைப் பார்த்துத் தானும் அவர்களைப் போலவே நடந்துவருகிறான். வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்றோ, எந்த நோக்கத்தோடு செய்கிறார்கள் என்றோ வினவினால், எல்லாவற்றையும் நன்றாக அறிந்துகொண்டே செய்வதாக நம்பிக்கையுடன் பதில் கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/33&oldid=1122049" இலிருந்து மீள்விக்கப்பட்டது