பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35. பெண்கள் ஆனந்தர்: பகவ, பெண்கள் சம்பந்தமாக நாங்கள் எப்படி நடந் கொள்ள வேண்டும்? - புத்தர்: ஆனந்த அவர்களைப் பார்க்கவே வேண்டாம். ஆனந்தர்: ஆனால் அவர்களைப் பார்க்க நேர்ந்துவிட்டால் என்ன செய்யவேண்டும்? புத்தர்: ஆனந்த பேசாமல் இருந்துவிடுங்கள்! ஆனந்தர்: பிரபு அவர்கள் எங்களிடம் பேசினால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்? புத்தர்: ஆனந்த, மிகவும் எச்சரிக்கையுடன் விழிப்பாயிருக்கவும்! "

மனிதன் பெண்களிடம் கொள்ளும் ஆசை.அழிக்கப்படாமல் மிகவும் சிறிதளவாவது மிஞ்சியிருக்கும்வரை, பால்குடிக்கும் கன்று தாயிடம் பற்றுக்கொண்டிருப்பது போல, அவன் மனம் பற்றில் தோய்ந்தேயிருக்கும். '

பிக்குணிகளுக்குரிய முக்கிய விதிகள் 1. ஒரு பிக்குணிநூறு வயதானவளாயிருந்தாலும், ஒரு பிக்கு எவ்வளவு இளைஞனாயிருந்தாலும், அவனைக் கண்டதும், அவள் எழுந்து வணங்க வேண்டும். 2.ஒரு பிக்குகூட இல்லாத பிராந்தியத்தில் பிக்குனி மாரிக் காலத்தில் தங்கியிருக்கக்கூடாது. 3.ஒவ்வொரு பட்சத்திலும் (மாதம் இருமுறை) பிக்குனி பிக்குகளிடம் தரும உபதேசம் பெற வேண்டும். 4.வருஷா காலம்" முடிவடையும்பொழுது பிக்குகளும், பிக்குணி களும் கூடிய சங்கத்தின் முன்பு மற்றவர் கண்டும், கேட்கும், சந்தேகித்தும் உள்ள விஷயங்களைப் பற்றிப் பிக்குணி விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும். 5.பெருந்தவறு புரிந்துள்ள பிக்குணி, ஒரு பட்ச காலம் அதற்குப் பரிகாரம் தேடிக்கொண்டு, இருபாலாரும் கூடியுள்ள சங்கத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டும். ' வருஷா காலம் - மழை காலம். ப. ராமஸ்வாமி 75