பக்கம்:வாழ்க்கை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

37


காலத்தாலும் இடத்தாலும் அவனிடமிருந்து விலகியுள்ள பகுத்தறிவு பெற்ற மக்களுடைய உணர்வோடு அவனும் ஒன்றிவிடுகிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் வேறொரு மூலையிலே வாழ்ந்த மக்களுடனும், அகண்டமான பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம், அவன் ஒன்று சேர்ந்து விடுகிறான். தான் எவ்வாறு தோன்றினான் என்பதைக்கூட அவன் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிவதில்லை; ஆயினும், காலத்தையும் இடத்தையும் கடந்து, மற்றைப் பகுத்தறிவு உணர்ச்சிகளுடன் தனக்குச் சம்பந்தம் இருப்பதை உணர்கிறான் ; அவைகள் தன்னுள் வந்து சேருவதாகவோ, தான் அவைகளுள் கலந்துகொள்வதாகவோ உணர்கிறான். மனிதனின் அகத்துள்ளே பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதால் தான் அது வரை வாழ்க்கை என்று அவன் கருதி வந்த வெறுந் தோற்றம் முடிவடைகிறது; அதிலிருந்துதான் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறது.

வேற்றுமையும் முரணும் வெறும் தோற்றங்கள்

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்புற்ற பின்பு மனிதர்கள் அடையும் வேற்றுமை உணர்ச்சிக்கும் வேதனைக்கும் காரணமா யிருப்பவை அவர்கள் முன்னால் பெற்றுள்ள போலிப் போதனைகளே. இவைகளாலேயே வாழ்க்கை இரு துண்டுகளாகப் பிரிந்து விட்டதாகப் பிரமை ஏற்படுகிறது.

வாழ்க்கை ஒன்றுதான் என்பதை மனிதன் அறிவான். ஆனால், இரண்டாக உணர்கிறான், உடலின் வாழ்வே வாழ்க்கை என்பது அவன் கற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/44&oldid=1122061" இலிருந்து மீள்விக்கப்பட்டது