பக்கம்:வாழ்க்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
உண்மை வாழ்வின் உதயம்

பயிரின் வாழ்க்கை ஒரு தானிய மணியில் அடங்கிக் கிடக்கின்றது. செடியின் வாழ்க்கை ஒரு வித்தில் அடங்கியிருக்கின்றது. இதே போல உண்மையான வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே மனிதனுள் அடங்கியிருக்கின்றது. ஒரு சமயம் வரும்போது, அது வெளியே தோற்றமாகிறது. தனிப்பட்ட மிருக வாழ்க்கை மனிதன் தன் சொந்த இன்பத்தை நாடும்படி வற்புறுத்துகின்றது ; உண்மையான வாழ்க்கை தனித்த இன்பம் சாத்தியமில்லை என்று வேறோர் இன்பத்தைக் காட்டுகின்றது. அந்த இன்பம் தொலைவிலிருப்பதால், தெளிவாகத் தெரியாமல், இலேசாகத் தென்படுகின்றது. அதை உடனேயே நன்கு தெரிந்துகொள்ள முடியாததால், மனிதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/48&oldid=1122065" இலிருந்து மீள்விக்கப்பட்டது