பக்கம்:வாழ்க்கை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

145


கிறது. இதற்குக் காரணமே யில்லை. புகை வண்டித் தண்டவாளத்தில் ஓர் ஆணி துருப்பிடித்துக் கழன்று விழுந்து விடுகிறது. தண்டவாளத்தின் மீது ஓடிய வண்டி கவிழ்ந்து விடுகிறது. வண்டியில் ஓர் அறையில் ஒரு தாய்-யாதொரு பாவமும் அறியாதவள்- அவள் கண்முன்பு அவளுடைய குழந்தைகள் நசுக்கபட்டுக் கிடக்கின்றன. பூகம்பத்தால் நகரங்கள் அழிந்து, பல்லாயிரம் மக்கள் சொல்லொணாக, துன்பங்களை அடைகின்றனர். இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவைகளும், மற்றும் மக்களை திணறச் செய்யும் பல்லாயிரம் பயங்கரமான துன்பங்களும் என்ன நன்மைக்காக ஏற்படுகின்றன?

என் நோய்க்குக் காரணமாக, விஷக்கிருமிகள் என் உடலுக்குள் சில பகுதிகளில் புகுந்து விட்டதைக் கூறலாம்; குழந்தைகள் தாயின் முன்பு நசுங்கியதற்கு, இரும்பு ஆணியில் ஈரம் பட்டுத் துருவேறியதைக் கூறலாம்; பூகம்பங்களுக்குப் பூமியின் இயற்கை பற்றிய விதிகளைக் காரணமாகக் காட்டலாம், அவசியம் தெரியவேண்டிய விஷயம் வேறு வேறு ஆட்களுக்கு ஏற்படாமல், இந்த மனிதர்களுக்கு மட்டும் இந்தக் கோரமான துயரங்கள் ஏன் ஏற்பட்டன; இவை ஏற்படாமல் ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளலாம்?

இதற்குப் பதிலில்லை. ஒருவன் மற்றொருவனைப் பார்க்கினும் அதிகமாய்த் துன்புறுவதற்கு எத்தகைய விதி இருக்க முடியும்? அத்தகைய நியதி கிடையாது என்று என் அறிவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/152&oldid=1122376" இலிருந்து மீள்விக்கப்பட்டது