பக்கம்:வாழ்க்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை

71


கிறார்கள்; சொல்லுகிறார்கள். இது மதிப்புமன்று ; வீரமுமன்று; மனித வாழ்வுக்கு ஏற்பட்ட தவிர்க்க முடியாத விதியே இதுதான். மனிதன் தான் உலகம் முழுவதிலுமிருந்து வேறுபட்டுத் தனித்திருப்பவன் என்று கருதினால், அதே சமயம் தன்னைப் போலவே மற்ற மனிதர்கள் அனைவரும் உலகம் முழுவதிலு மிருந்து வேறுபட்டுத் தனித்தன்மை பெற்றிருப்பதை அவன் காண நேருகிறது ; அதனால் ஒரே மாதிரியாயுள்ள அவனுக்கும் மற்றவர்களுக்கும் இணைப்பு அல்லது சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த இணைப்பிலிருந்து தனி நன்மை என்பது வெறும் மயக்கம் என்பதையும், உண்மையான நன்மை ஒன்றே பகுத்தறிவு உணர்ச்சியைத் திருப்தி செய்யும் என்றும் அவன் கண்டு கொள்கிறான்.

மிருகத்திற்குத் தன் நலத்திற்குரிய செயலே லட்சியம் , அப்படி யில்லாவிடின் அதற்கு வாழ்க்கை இல்லாமற் போகும். மனிதனுக்கு இதற்கு நேர்மாறானது; தன் சுய நலத்திற்கான செயல் அவனுக்கு வாழ்க்கையே இல்லாமற் செய்துவிடும். மிருகத்திற்குச் சுயநலம் அவசியம்; மனிதனுக்கு அதுவே தீமை.

மிருகம் தன் சுய நலத்தையும், இன விருத்தியையுமே வாழ்வின் முதன்மையான லட்சியமாகக் கொள்கிறது. ஏனெனில், அந்த வாழ்வு தீர்ந்து போகக்கூடியது என்றும், துயரம் நிறைந்தது என்றும் எடுத்துக்காட்டுவதற்கு அதற்குப் பகுத்தறிவு உணர்ச்சியில்லை. ஆனால், மனிதன் விஷயத்திலோ, அவனுடைய உடலின் பண்பு உயிரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/78&oldid=1123818" இலிருந்து மீள்விக்கப்பட்டது