பக்கம்:வாழ்க்கை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வாழ்க்கை


மரணத்தால் ஏற்படும் புதிய சம்பந்தம்

வாழ்க்கை உலகத்தோடு கொள்ளும் ஒருவிதத் தொடர்பு அல்லது சம்பந்தம் என்பதைத் தவிர வேறு முறையில் அதைப்பற்றி நாம் கருத முடியாது. நம் வாழ்க்கையும் அப்படித்தான். மற்ற ஜீவன்களின் வாழ்க்கையையும் அப்படியே கருதுகிறோம்.

ஆனால், நம் வாழ்க்கையில் இந்தச் சம்பந்தம் ஒரு முறை ஏற்பட்ட நிலையிலேயே இல்லை என்றும், அவ்வப்போது புதிய சம்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்றும் நாம் தெரிந்து கொள்கிறோம். மனிதனின் மிருக இயல்பு பகுத்தறிவு உணர்ச்சிக்கு அதிகமாய்க் கட்டுப்பட்டு வரும்போது- அன்பு மலர்ந்து பெருகும்போது- இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் வாழ்வு அழிவது நிச்சயம் என்பதால், உலகத்தோடு நம் தொடர்பு ஒரே நிலையில் இல்லாமல் மாறிவருவது தெளிவாகும். புதுத் தொடர்புகளை நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தப் புதுத் தொடர்புகளை அமைத்தல் - அதாவது வாழ்க்கையின் இயக்கம் மரணத்தைப் பற்றிய கருத்தை அழித்து விடுகிறது.

உலகத்துடன் பகுத்தறிவுக்குப் பொருத்தமான புதுத் தொடர்புகளை அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளாதவனுக்கே மரணத்தைப் பற்றிய எண்ணம் தோன்றும். அவன் ஆதியில் உலகத்தோடு என்ன சம்பந்தம் பெற்றிருந்தானோ அதே நிலைமையில் இருப்பவன். அவனுக்கு மரணம் பின்னால் மட்டும் வரும் என்பதில்லை ; இப்போதே அதை அநுபவிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/135&oldid=1123849" இலிருந்து மீள்விக்கப்பட்டது