பக்கம்:வாழ்க்கை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

வாழ்க்கை


தன் நேரத்தையும் வலிமையையும் அளிப்பதோடு அவனுக்காகத் தன் உடலை வாட்டி வருத்தியும், தன் உயிரையே அர்ப்பணம் - செய்தும் வந்தால் தான் நாம் அன்பென்று கொண்டாட முடியும். அத்தகைய அன்பிலேதான் அன்பினால் விளையும் இன்பத்தை நாம் காண்கிறோம். அத்தகைய அன்பு மக்களிடம் இருப்பதால் தான் உலகம் வாழ்கிறது.

தாய் குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதில் அவைகளின் வளர்ச்சிக்காகத் தன்னையே அளித்து வருகிறாள். இது அன்பு. இது போலவே, மற்றவர்களின் நன்மைக்காக ஒரு தொழிலாளி தன் உடலை வருத்தி அரும்பாடுபட்டு உயிர்போகும் நிலைவரை உழைத்து வருதல், மற்றவர்கள் வாழ்வதற்காகத் தன்னையே அளிப்பதாகும். அவனுக்கும், எவர்களுக்காகத் தியாகம் செய்கிறானோ அவர்களுக்கும் இடையில் தியாகம் செய்வதற்குத் தடையாக எதுவும் இல்லாதிருந்தால் தான், இந்த அன்பு ஏற்பட முடியும். தாதியிடம் தன் குழந்தையைக் கொடுத்து வளர்க்கச் செய்யும் தாய் அதனிடம் அன்பு செலுத்த முடியாது; செல்வங்களைத் தேடி வைத்துக்கொண்டிருக்கும் மனிதனும் அன்பு செலுத்த முடியாது.

“தான் ஒளியிலிருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு, தன் சகோதரனை எவன் வெறுக்கிறானோ, அவன் இப்போதும் இருளில் தான் இருக்கிறான். தன் சகோதரனை நேசிப்பவன் ஒளியிலேயே இருக்கிறான். அவன் இடறி விழுவதற்குக் சந்தர்ப்பமே யில்லை. ஆனால், தன் சகோதரனை வெறுப்பவன் இருளிலேயே இருக்கிறான், இருளிலேயே நடக்கிறான், இருள் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/113&oldid=1122195" இலிருந்து மீள்விக்கப்பட்டது