பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருகிறார். ஹிட்லருக்கு ஏற்பட்ட கதிதான் மா ஸே–துங்குக்கும் அவருடைய சீடர்களுக்கும் காத்திருக்கின்றது.

ஜெர்மன் படையோடு சீனப் படையை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. ஜெர்மன் படை வல்லவர்கள் வார்த்தெடுத்து நிறுத்தியது. மற்ற ஐரோப்பியப் படையினர் நேருக்கு நேராக ஜெர்மன் படையைச் சந்தித்தவுடன் திகிலடைவர். படை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் ஜெர்மன் தலைமைக் காரியாலயத்தில், உலகப் போர் முறைகளை யெல்லாம் கற்றறிந்த, பரம்பரையாக வந்த மேதைகள் இருந்தனர். விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் புதுப் புதுப் போர்க் கருவிகளைப் படைக்க வழிசெய்து வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மனி பெரும் தொழிற் பெருக்கமுள்ள நாடு. மக்களுக்கு வேண்டிய பொருள்களையும், போர்த் தளவாடங்களையும் அது விரைவிலே உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது. கோடிக் கணக்கான மக்கள் அனைவரும் ஒரே கட்டுக்குள் அடங்கி, எப்படியும் தங்கள் தாய்நாட்டுக்கு விமோசனங் காணவேண்டும் என்பதில் அசையாத உறுதி கொண்டிருந்தனர்.

இந்த வல்லமைகளில் எதுவும் சீனாவிடமில்லை. சீனப் படையினர் நமது எல்லையில் கொண்டு வந்த பீரங்கிகளும் பிறவும் ரஷ்யாவிடம் இரவல் வாங்கியவை. பட்டினி கிடப்பதிலும், கிடைத்ததை அள்ளி விழுங்குவதிலும், கொள்ளை யடிப்பதிலும், ஏமாற்று வித்தைகள் செய்வதிலுமே அவர்கள் வல்லவர்களென்று தெரிகின்றது. சீனர்கள் பின்வாங்கி ஒட்டம் பிடித்தால், அவர்களை யாரும் தொடர்ந்து பிடிக்க முடியாது!’ என்று நம் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினர். நம்முடைய சிப்பாய்கள் உண்மையிலேயே நாம் பெருமைப்படக் கூடியவர்கள். உலகமே

72