பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமையையும் மதித்து நடப்பதாக உறுதி கூறியிருக்கின்றது.

பின்னர் 1955-லிருந்து 1958 வரை சீனர் கூட்டங்களும், துருப்புக்களும் இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவல் செய்து பல இடங்களில் புகுந்து வந்ததைக் கண்டித்து இந்திய அரசாங்கம் பல புகார்களைச் சீன சர்க்காருக்கு அனுப்பி வந்தது. 17-1-59 தேதியில் அனுப்பிய புகாருக்குப் பதிலாக 23-1-59-ல் சீனப் பிரதமர் தெரிவித்த பதிலில்தான் அவருடைய அரசாங்கத்தின் கருத்து முழுதும் வெட்ட வெளிச்சமாயிற்று. சீன இந்திய எல்லை எக்காலத்திலும் நிர்ணயம் செய்து தீர்மானிக்கப்படவில்லை யென்றும், அது பற்றி இரு திறந்தாருக்குள்ளேயும் சில வேற்றுமைகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 1954-லேயே சீன சர்க்கார் இந்தப் பிரசினையை எழுப்பாததற்குக் காரணம் அப்போது அதைத் தீர்த்துக்கொள்ளக் காலம் கனிந்திருக்கவில்லை என்றும் அவர் விளக்கினர். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் எல்லையாக விளங்கிய மக்மகான் கோடு என்பதைச் சீன சர்க்கார் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதேயில்லை என்றும், சீனத் தேசப் படங்களில் காணப்படும் எல்லைகள் சரியானவை யென்றும், அவை முந்திய படங்களைப் பார்த்து முறைப்படி தயாரிக்கப் பெற்றவை யென்றும் அவர் முடிவாகக் கூறிவிட்டார்.

சீனப் பிரதமரின் கூற்று இரு நாடுகளின் எல்லைகள் அனைத்தையுமே விவகாரத்திற்குரியனவாகச் செய்து விட்டது. மேலும் காஷ்மீர் இந்திய ராஜ்யம் என்று சின ஒப்புக் கொள்ளாததுடன், இமயமலைத் தொடர் களை ஒட்டியுள்ள நேப்பாளம், சிக்கிம், பூட்டான் ஆகிய ராஜ்யங்களின் எல்லைகளையும் அது புனராலோசனை செய்ய முன்வந்தது.பூட்டானுக்குக் கிழக்கே

20