பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருக்கின்றது. பொதுத்துறை, தனியார் துறை என்ற இரு பிரிவின் எல்லைகளும் இன்னும் துலக்க மாகப் பிரிக்கப்படவில்லை. உதாரணமாக அரசாங்க மும் நிலக்கரி உற்பத்தி செய்கின்றது, தனியார்களும் செய்கின்றனர். ஆகவே நாட்டில் அரசாங்கமும் தனி யாரும் சேர்ந்தே தொழில்களை நடத்தி வரவேண்டி யிருக்கின்றது. இது கலப்புப் பொருளாதாரம். இதல்ை விளையும் நன்மைகள் பல. ஆனல் தனியார் துறைக் குத் தேவையான எல்லா உதவிகளையும் அரசாங்கம் உடனுக்குடன் கவனித்துச் செய்து வரவேண்டும். அதேபோல், தனியார் துறையில் கையாளப்படும் சிக் கனத்தைப் பொதுத் துறை ஸ்தாபனங்களும் மேற் கொள்வதோடு, நாள் தோறும் திறமையை வளர்த் தும், செம்மையான முறையில் கணக்குகள் வைத்துக் கொண்டும் ஆதாயத்தைக் காட்ட முற்படவேண்டும். தனிப்பட்ட முதலாளிகள் தங்கள் தொழில்களில் காட்டும் அக்கறையைப் பொதுத் துறை ஸ்தாபனங் களின் தலைவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்று சொல்லப்படுகின்றது. பெருந் தொழில்களை வளர்ப்ப தில் பொதுத்துறையிலுள்ளவர்களின் அக்கறையைப் போல் தனியாரிடம் காண்பதும் அரிது. நாடு சம்பந் தப்பட்டவரை பொதுத்துறை, தனித்துறை பற்றிய விவாதத்தை நிறுத்திக்கொண்டு, தீவிரமான தொழில் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொள்வது தான் முறை. தொழில்களை நடத்தும் முதலாளிகளும், கம்பெனிகளின் தலைவர்களும், அரசாங்கத் தொழிற் சாலைகளின் தலைவர்களும், எல்லா நிர்வாக ஊழியர் களும், தொழிலாளர்களும், வீரமும், திறமையும், செழிப்பும் கொண்ட புதிய இந்தியாவைப் படைக்கும் பேற்றில் நமக்குப் பங்கு கிடைத் திருக்கின்றது : நாட் டின் செழிப்பே நமது செல்வம்! என்ற ஒரே உணர்ச்சி இ. சீ. பா.-17 25 7