பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடினும், அந்தப் பாணியில் - முறையில் - சமுதாயம் அமைய வேண்டும் என்பது தீர்மானம். இதை அர சாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எல்லாத் தொழில் களையும் தனியார் கையில் விட்டு விடுவதற்கில்லை. எல் லாத் தொழில்களையும் புதிய இந்திய அரசாங்கம் தானே ஏற்று நடத்துவதும் இயலாது. ஆகவே மூலா தாரமான பெருந்தொழில்களை அரசாங்கம் மேற் கொள்ளவும், மற்றும் பல தொழில்களைத் தனியார் மேற்கொள்ளவும் திட்டங்களில் வசதி அளிக்கப் பெற் றுள்ளது. தனியார் விரும்பாதவையும், தொடக்கத்தில் மிகுந்த நஷ்டமுண்டாகக் கூடியவையுமான தொழில் களை மட்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசாங்கம் நடத்தி, பின்னர் தனியார் கையில் அவைகளை ஒப் படைத்தல் வழக்கம். அப்படி நஷ்டத் தொழில்களை மட்டும் இந்திய அரசாங்கம் நடத்தமேற்கொண்டால், இங்குள்ள பொருளாதாரமே சீர்குலைந்துவிடும். தவிர வும் தனியார் இலாபம் பெறக் கூடிய சில நிறுவனங் களையும் அரசாங்கமே எடுத்துக் கொள்வது இங்கே அவசியமாயிற்று. இதுவரை அரசாங்கமே உடைமை யாகக் கொண்டு நடத்திவரும் தொழில்கள் நான்கு வகைப்பட்டவை: உருக்கு இரசாயன உரம் முதலியவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், ரயில்வேக்கள், தபால்-தந்தி நிலையங்கள் முதலிய சமூக உதவியான ஸ்தாபனங்கள், நிலக்கரி போன்ற சுரங்கங்கள், பாங் குத் தொழில், இன்ஷாரன்ஸ் முதலியவை. சில பெருந் தொழிற்சாலைகளை அரசாங்கமே மேற் கொண்டு நடத்த முடியும். மற்றும் சிலவற்றைத் தனியார் நடத்த முடியும் என்ருலும், நாட்டின் செல் வம் சிலருடைய கையில் குவிந்துவிடக் கூடாது என் பதற்காக அரசாங்கமே அவைகளையும் நடத்தவேண்டி 256