பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளி நாட்டு நாணயத்தில் நமது சேமிப்பும் அதிக மாகும். ட்ரோம்பே உரத்தொழிற்சாலை அமைப்பும் அதைச் சுற்றி நகர நிர்மாணமும் மிகுந்த வேகத்துடன் நடை பெற்றிருக்கின்றன. அஸ்ஸாமிலுள்ள நாம்ரூப் என்னுமிடத்தில் உரத் தொழிற்சாலைக்கு வேண்டிய நிலங்களைப் பெரும்பாலும் வாங்கியாகிவிட்டது. 1965-லிருந்து உற்பத்தி நடை பெறக்கூடும். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒர் உரத் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் 1961-இல் அங்கீகரிக்கப்பெற்றது. 1966-இல் இது வேலை செய்யத் தொடங்கலாம். மத்தியப் பிரதேசத்திலும் நிலக்கரியி லிருந்து வருடத்திற்கு லட்சம் டன் யூரியா உரம் தயா ரிக்கும் தொழிற்சாலை நிறுவ ஏற்பாடாகிவருகிறது, மேலே குறித்துள்ள உரத்தொழிற்சாலைகளில் நெய்வேலியிலுள்ளதைத் தவிர மற்ற எல்லாவற்றை யும் ஒரே நிர்வாகத்தின் கீழ் முறைப்படுத்தி நடத்துவ தற்காகப் பழைய வலிந்திரி கம்பெனி, ஹிந்துஸ்தான் கெமிகல்ஸ் உரங்கள் கம்பெனி ஆகியவைகளையெல் லாம் ஒன்ருகச் சேர்த்து, 1961, ஜனவரி 1-ந் தேதி இந்திய உரக் கார்ப்பரேஷகை அரசாங்கம் நிறுவியுள்ளது. கப்பல் கட்டுதலும் கப்பல் போக்குவரத்தும் : பண்டைக் காலம் முதலே இந்தியர் கடல் யாத்திரைகள் செய்து பல நாடுகளுடன் தொடர்பு கொண்டவர்கள். எனி னும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கப்பலோட்டும் தொழிலை அவர்களுடைய சொந்த உரிமையாகக் கொண்டிருந்தனர். ஒரு பழைய கப்பலை விலைக்கு வாங்கி 1906 ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் இலங் கைக்கு மிடையே ஒட்டியதற்கு வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களை ஆங்கில அரசு எதிர்த்துப் போட்டி யிட்ட்து யாவர்க்கும் நினைவிருக்கும். சிதம்பரனர் ஆறு 2.94