பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் இணைவதா, சுதந்தரமா யிருப்பதா என்று ஆலோசனை செய்து வரும் தருணத்தில்தான் பாகிஸ்தான் ஆயிரக்கணக் கான மலைவாசிகளைச் சேர்த்து, தன் படையினரையும் கூட அனுப்பிக் காஷ்மீர்மீது படையெடுக்கச் செய் தது. அவர்கள் காஷ்மீரின் தலைநகராகிய ரீநகர் வரை வந்துவிட்டனர். அப்பொழுதுதான் மகாராஜா இந்தியாவுடன் சேர இசைந்தார். உடனே இந்திய அரசாங்கம் தன் படையினரை விமானங்கள் மூலம் அங்கு அனுப்பி, எதிரிகளே ஓட ஓட விரட்டும்படி ஏற் பாடு செய்தது. அப்பொழுது நம் படையினர் மிகுந்த உற்சாகத்தோடு பாகிஸ்தானின் தலைநகர்வரை சென் றிருப்பர். ஆனல் ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் நாம் போரை நிறுத்த நேரிட்டது. போரை நிறுத்த வேண்டுமென்றும், பாகிஸ்தானியர் பிடித்து வைத் துக்கொண்டிருந்த சுதந்தரக் காஷ்மீர் என்ற பகுதி யைக் காலிசெய்துவிட வேண்டுமென்றும் ஐ. நா. தீர் மானம் செய்தது. போர் நின்றது: போர் நிறுத்த எல்லையும் வகுக்கப்பெற்றது. இரு திறத்துப் படைக ளும் போர் நிறுத்த எல்லையின் இரு பக்கங்களிலும் நின்றுகொண்டன. 18 ஆண்டுக் காலமாக அப் படை கள் அவ்வண்ணமே நின்று வருகின்றன. ஆனல் பாகிஸ்தான் பிடித்த பகுதியை இதுவரை காலி செய்ய வேயில்லை. போர் நிறுத்தத்தின்போது பாகிஸ்தான் காஷ்மீரிலிருந்து வெளியேறியபின், அங்குப் பொது மக்களின் வாக்கெடுப்பு நடைபெறவேண்டு மென்றும் கூறப்பட்டது. பா கி ஸ் தா ன் வெளியேறவுமில்லை. வாக்கெடுப்புக்கு அவசியம் ஏற்படவுமில்லை. போரை நிறுத்திய பிறகு ஐ.நா. 18 ஆண்டுக் கால மாகப் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குப் பரிகாரம் ஒன்றுமே கூருமலிருந்துவிட்டது. காஷ்மீரில் போர் 3.43