பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விட்டன. ஆயினும் இந்தியரும், சீனரும், எத்தனை எத்தனையோ புயல்கள் போராட்டங்களை யெல்லாம் கடந்து, இன்றைக்கும் கோடிக் கணக்கான மக்களுடன் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

சீன மக்கள்

சீன மக்கள் மஞ்சள் நிறமானவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் பெண்களின் பாதங்களே இரும்பு ‘பூட்ஸு’களில் கட்டி வைத்துச் சிற்றளவாக இருக்கும்படி செய்துவந்தார்கள். முக்கியமாகச் செல்வர்கள் இந்த முறையைக் கையாண்டு வந்தனர். நாளடைவில் இவ் வழக்கம் மறைந்து விட்டது. மற்றாெரு வேடிக்கையான வழக்கம், சீன ஆடவர்கள், தலையை முன்புறம் முண்டனம் செய்து, பின்புறம் கேசத்தை இரண்டு பின்னல்களாகப் பின்னித் தொங்கவிட்டுக் கொள்வது. மங்கோலியர் படையெடுத்து வந்து அவர்களை அடக்கிய பின்னர், தங்களைப் போலவே அவர்களும் பின்னல் போடவேண்டும் என்று விதித்ததால், இவ்வழக்கம் ஏற்பட்டது. மஞ்சூ வமிசத்தார் ஆட்சியில் இரண்டு பின்னல்களை மாற்றி ஒற்றைப் பின்னலாக விதிக்கப்பட்டது. அடிமை மக்களுக்கு இந்தப் பின்னல் ஒர் அடையாளமாக இருந்து வந்தது. வெள்ளைக்காரர்கள் இந்தப் பின்னலைப் ‘பன்றி வால்’ என்று ஏளனம் செய்துவந்தார்கள்.

சீன மக்களிலே பலர் பெரிய கல்விமான்களாயிருந்தனர். என்றைக்கும் அவர்களிடையே கல்விக்கு மதிப்புண்டு. ஒருவர் கையெழுத்து அழகாயிருந்தால், அதை அவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். ஞானிகளுக்கும், கவிவாணர்களுக்கும் அந்நாட்டில் குறைவே யில்லை. நாடு முழுதும் போற்றப்பெற்று, உலகத்தாரின் நன்மதிப்பையும்பெற்ற கன்பூவியஸ், லாவோத்ஸே,

117