பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெற்றாேர்களைச் சுடும்படி சீனர்கள் செய்தார்கள் என்று தலாய் லாமா அவர்கள் தாம் சமீபத்தில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கிறார். (அந்த நூலின் பெயர் ‘என் நாடும் என் மக்களும்’) ஆயிரக்கணக்கான திபேத்தியர் சிறையிடப்பட்டுள்ளனர்; பல்லாயிரக் கணக்கானவர்களை எங்கே கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. ஆங்காங்கே பலர் துன்பம் தாங்கமுடியாமலும், கட்டாய வேலையின் கொடுமையாலும் தற்கொலையால் உயிரை மாய்த்துக் கொண்டனர். ஆடவர்கள் மலைகளுக்கு ஒடிக் கொரில்லாச் சண்டைகள் செய்கையில், ஊரிலிருந்த பெண்டிரையும், குழந்தைகளையும் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளுவது சீனர் வழக்கமாயிருந்தது. அநேகம் கிராமங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏதோ ஒரு கட்டாய ஆபரேஷன் செய்து, அவர்கள் மேற்கொண்டு குழந்தைகள் பெறாமலிருக்கும்படி சீனர்கள் செய்ததாகவும் சாட்சியங்கள் இருக்கின்றன. திபேத்தில் நடந்த கொடுமைகள் தாங்காமல், பல்லாயிரம் மக்கள் கால் நடையாக இந்தியாவுக்குள் ஒடி வந்துள்ளனர்.

65 கோடி ஜனத் தொகையுள்ள சீனா 70 அல்லது 80 லட்சம் மக்களை மட்டும் கொண்ட திபேத்தில் புகுந்து செய்து வரும் கோரக் கொடுமைகள் வெளியுலகுக்கு எப்படித் தெரிய வந்தன ? தலாய் லாமா இந்தியாவுக்குள் வந்த பின் சர்வதேச வழக்கறிஞர் குழு ஒன்று ஏற்பட்டுத் தீவிரமாக விசாரணை செய்து, இக் கொடுமைகளை யெல்லாம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை 345 பக்கமுள்ளது. விசாரித்த குழு 50 நாடுகளைச் சேர்ந்த 30,000 வழக்கறிஞர்களின் சங்கத்தால் நிறுவப்பெற்றது. அதில் இலங்கை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஒரு

240