பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இருக்கவேண்டும். குறுகிய கால அளவில், மின்னல் வேகத்தில், ஒவ்வொரு போரையும் முடித்துக்கொள்ள வேண்டும். உலக நாடுகள் உண்மையை அறிந்து பெருங் கண்டனங்களை எழுப்புமுன்பும், மேலை வல்லரசுகளோ, ரஷ்யாவோ குறுக்கிட்டுத் தடுக்க வராத நிலையிலும், தான் எண்ணிய செயல்களை விரைவிலே நிறை வேற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த நோக்கத்துடனேதான் இந்தியாவில் கால் வைத்தது கம்யூனிஸ்ட் சீனா. ஆனால் அந்த யானையின் கால் இந்திய முதலையின் வாயில் சிக்கியது.

13. யுத்தத்தைப் பற்றி ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் கருத்து வேற்றுமை இருப்பதோடு, கம்யூனிஸ்ட் கொள்கை பற்றியும் வித்தியாசம் உள்ளது. சென்ற யுத்தத்திலிருந்து ரஷ்ய மக்களும், ஸாேவியத் தலைவர்களும் போரினல் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை நன்கு தெரிந்து கொண்டிருக்கின்றனர். பெரும் போரினல் ஆதாயமும் இல்லை யென்பது வெளிப்படை. மேலும் மூன்றாவது உலக யுத்தம் முந்திய இரண்டு போர்களைப் போலிராது. யுத்தம் தொடங்கிய சில மணி நேரத்தில் அணுகுண்டுகளால் ஒர் எதிரி மற்ற எதிரியின் போர்ச் சாதனங்களை அழித்துவிட முடியும். கோடிக் கணக்கான மக்களும் மடிவர். அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளின் அழிக்கும் ஆற்றலை ஸாேவியத் தலைவர்கள் மிக நன்றாக அறிவார்கள். மூன்றாவது உலகப் போர் தோன்றாமல் அமைதி இருந்தால்தான் ரஷ்யா வாழமுடியும், வளம்பெற்று வளரமுடியும், மற்ற நாடுகளிலும் கம்யூனிஸம் பரவமுடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். முதலாளித்துவ நாடுகள் சமாதானமாக வாழ்ந்து, பொருளாதார முன்னேற்றத்தில் தங்களுடன் போட்டியிடவேண்டும் என்றுதான் முந்திய ஸாேவியத் பிரதமர் அடிக்கடி

67