பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘விடுதலைப் படை’ யென்றே பெயர். முதலில் அது சீனாவை ‘விடுதலை’ செய்தது ; பின்னர் ஒவ்வொரு நாடாகப் படையெடுத்து, அந்தந்த நாட்டு மக்களையும், தலைவர்களையும், படைகளையும் வதைத்து அது தன் விடுதலை வேலையைச் செய்துகொண்டே வருகின்றது! முடியாட்சி ஒழிந்து புதிதாகக் குடியரசு நிறுவிக் கொண்ட கம்யூனிஸ்ட் சீனா தன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், தன் ஆதிபத்திய, அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும், ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பெருகிவரும் சீனர்கள் குடியேறி வாழ்வதற்கேற்ற வெளிநாடுகளைப் பிடித்துக் கொள்ளவும் கையாளும் முறையைத் தான் ஏகாதிபத்திய முறையென்று கூறுவது பொருந்தும். அந்த ஏகாதிபத்திய ஆசைக்குத்தான் ‘விடுதலை’ இயக்கமென்று கம்யூனிஸ்ட் சீனர் பெயர் வைத்திருக்கின்றனர் ! அடிமைத்தனம் என்பதைத் தான் அவர்கள் ‘விடுதலை’ என்று சொல்லிக் கொள்கிறார்கள். பத்து ஆண்டுகளாக மக்களின் உதிரத்தை வெள்ளமாகப் பெருக்கிச் சீனர் திபேத்தையும் விடுதலை செய்துள்ளனர்!

தொடக்கத்தில் 8 முதல் 15 வயது வரையுள்ள திபேத்தியக் குழந்தைகளை யெல்லாம் பிடித்து அவர்கள் சீனவுக்கு அனுப்பினர்கள். பிறகு, சிறு குழந்தைகளையும் கொடுத்துவிடும்படி பெற்றாேர்களிடம் கேட்டார்கள். அதற்குப் பின்னல், பிறந்த 10 அல்லது 15 நாட்களுக்குள் குழந்தைகளைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரினர். சில பிராந்தியங்களில் பிறந்த குழந்தைகள் அனைத்தையும் பெற்றாேர்கள் ; வேறு சில இடங்களில் விகிதாசாரம் வகுத்து-கோட்டா முறைப்படி-குழந்தைகளை எண்ணி வாங்கிக் கொண்டனர். திபேத்திலேயே கம்யூனிஸ்ட்

236