பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முக்கியமான ஒன்று. அங்கு ஏராளமான நிலக்கரியும், பெட்ரோல் எண்ணெயும் கிடைப்பதுடன், மலைச் சாரல்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்களில் தேயிலை பயிராகின்றது. நம் ஏற்றுமதிகளில் இத் தேயிலை முக்கியமான பொருளாகும். அரசாங்கத்திற்குச் சொந்தமான 6, 350 சதுர மைல் காடுகள் இருக்கின்றன. வயிரம் பாய்ந்த நல்ல மரங்களும், பிரம்பும் காடுகளில் கிடைக்கின்றன. மற்றும் நெல், எண்ணெய்க்குரிய விதைகள், கரும்பு, கடுகு, சணல், பருத்தி முதலியவையும் அஸ்ஸாமில் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டு உற்பத்தியும், கைத்தறி நெசவுமே அங்குக் குடிசைத் தொழில்கள். பெரிய ஆலைத் தொழில்களெல்லாம் இனிமேல்தான் ஏற்படவேண்டும். அஸ்ஸாமின் ஒரு பகுதியான நாகாலாந்து என்ற நாகர்கள் வசிக்கும் மலைப் பிரதேசம் இப்போது தனி ராஜ்யமாக விளங்குகின்றது. நாகர்கள் அடிக்கடி கலகம் செய்து இந்திய அரசிலிருந்தே வெளியேறுவதாகக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். அதனால் நாகாலாந்து தனித்து விசேட முன்னேற்றமடைவதற்காக மத்திய அரசாங்கமும், நம் கிழக்கு மண்டல ராஜ்யங்களான அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா ஆகியவையும் சேர்ந்து உதவி புரிதல் அவசியம். நேபாவைச் சேர்த்து அஸ்ஸாமின் மொத்த விஸ்தீரணம் 85 ஆயிரம் சதுர மைல்கள்: மக்களின் எண் னிக்கை 1,18, 60,059.

நேபாவின் தனி விஸ்தீரணம் 31,438 சதுர மைல். இதில் காமெங்,திராப், சுபன்ஸிரி, சியாங், லோஹித் என்ற ஐந்து, எல்லைப்புற டிவிஷன்கள் அடங்கியிருக்கின்றன. இங்கு வசித்து வரும் மலைஜாதியினரான மோன்பா, அகா, டப்ளா, மிரி, அபார், மிஷ்மி வகுப்பினர்களுக்கும் அஸ்ஸாமிலுள்ள மலைஜாதியினருக்கும்

30