பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தீர்ப்பில் கம்போடியாவின் பழைய எல்லையே சரியானதென்றும், தாய்லாந்து அதை ஆட்சேபிக்க முடியாதென்றும் முடிவு சொல்லப்பட்டிருக்கிறது. கம்போடியாவின் எல்லை முற்காலத்தில் குறிக்கப்பெற்ற சமயம் தாய்லாந்துக்கு எல்லை குறித்த தேசப்படம் அனுப்பப் பெற்றிருந்தது. தாய்லாந்து ஆட்சேபம் எதுவும் செய்யவில்லை. ஆட்சேபம் செய்யாததால், அந்த எல்லையே தாய்லாந்தையும் கட்டுப்படுத்தும் என்று முடிவாகியிருக்கிறது. தீர்ப்பில் காணும் வாசகம் இது

“...லயாம் [1] அதிகாரிகள் தேசப்படத்தை மறுதலிக்கவோ, அதுபற்றி முக்கியமான பிரசினே எதையும் எழுப்பவோ விரும்பியிருந்தால், அப்போதையச் சூழ்நிலைகளை அனுசரித்து, நியாயமான ஒரு கால வரம்புக்குள் அவர்களுடைய கருத்தைப் பற்றிய ஏதாவது அறிகுறி காட்டியிருக்க வேண்டும். அவர்கள் அப்பொழுதும் அவ்வாறு செய்யவில்லை; பல ஆண்டுகளுக்குப் பின்னும் செய்யவில்லை. அதனால் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவே கொள்ள வேண்டும்.”

இவ் விஷயத்தை நீதிபதி திரு. அல்ஃபரோ (Judge Alfaro) தமது தனி அபிப்பிராயத்தில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார் :

‘பிரத்தியட்சமான விஷயங்களைக் கண்டுகொண்டு, பொதுவாகச் சம்மதம் அல்லது தெளிவான அங்கீகாரத்தைக் குறிப்பதற்குப் பேசாமலிருத்தலே பெரும்பாலும் வழக்கம். அதேபோல, ஒர் உரிமையை வற்புறுத்தவோ, நிலைநிறுத்தவோ, பாதுகாத்துக் கொள்ளவோ, ராஜ்யங்கள் பொதுவாகக் கையாளும் முறைப்படி ஆட்சேபிக்க அவசியம் இருக்கும்பொழுது ஆட்சேபிக்கத் தவறி


  1. தாய்லாந்தின் பழைய பெயர் ஸ்யாம்

38