பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்தியாவுக்கும் சீனுவுக்கு மிடையே உள்ள எல்லேயின் நீளம் 2,400 மைலுக்கு மேற்பட்டது. இந்த நீண்ட எல்லைக்குள் இந்திய அரசாங்கம் தன் இடத்தில் தான் அதிகாரம் செலுத்தி வந்ததைச் சீனாவில் ஏற்பட்டிருந்த எந்த அரசாங்கமும் ஆட்சேபித்ததில்லை. இந்த எல்லே முழுதும் ஒப்பந்தங்களினல் நிர்ணயமானது; தனியான ஒப்பந்தமில்லாத இடங்களில் வழக்கத்தால் அங்கீகரிக்கப் பெற்றது ; பல பகுதிகளில் ஒப்பந்தம், வழக்கம் இரண்டினலும் உறுதிப்படுத்தப் பெற்றது. ஆனல் திடீரென்று சீன அரசாங்கம் ஒரிடத்தைப் பற்றி ஆட்சேபம் கூறியதில், அது விவரம் தெரியாமல் கண்டனம் அனுப்பியிருப்பதாக இந்திய அரசாங்கம் எண்ணியது. எனவே இந்தியத் துருப்புக்கள் திபேத்து எல்லைக்குள் நுழையவில்லையென்று மறுப்புக் கூறியதுடன், சீன அதிகாரிகள் இந்தியப் பிரதேசமாகிய பாராஹோத்திக்குள் வர முயன்றதற்கு ஆட்சேபமும் தெரிவித்துக் கொண்டது. இதன் பின்னர் இந்தியப் பிரதம மந்திரி நேரு அவர்கள் அக்டோபர் மாதம் சீனவுக்கு விஜயம் செய்திருக்கையில், சீனப் பிரதமர் சூ என். லாயிடம் சீனத் தேசப் படங்களில் சீன - இந்திய எல்லைகள் தவறாகக் காணப்படுவதை எடுத்துக் காட்டினர். அந்தப் படங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்லவென்றும், கம்யூனிஸ்டுகளுக்கு முந்திய கோமிண்டாங் சர்க்கார் தயாரித்தவைகளை அப்படியே திரும்ப அச்சிட்டிருப்பதாயும், புதிய சீனவின் மக்கள் குடியரசு அவைகளைத் திருத்த நேரமில்லாமற் போய்விட்ட தென்றும் சீனப் பிரதமர் மறுமொழி கூறினர். திபேத்து சம்பந்தமாகச் சீன இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திலும் இந்தியாவின் பிரதேச கெளரவத்தையும், பூரண ராஜாங்க

19