பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுடன் செயல் புரிந்தால் துறை வேற்றுமைகள் குறைந்துவிடும். தேசிய உடைமை நாட்டு மக்கள் அனைவருக்கும் தொழில் கிடைக்க வேண்டும்; நோய்க்கும், முதுமைக்கும் பாதுகாப்புக் கிடைக்க வேண்டும். இவைகளுக்குப் பொறுப்பானது அரசாங்கம். கோடிக்கணக்காகவும், இலட்சக்கணக்கா கவும் மக்கள் வேலையில்லாமல் திண்டாடித் திரிய வேண்டி யிருந்தால், நம் ஜனநாயகமும் தேய்ந்து மறைந்துவிடும். அரசியல் அதிகாரம் அனைத்தும் செல்வாக்குள்ள சிலர் கையிலேயே சிக்கிவிடும். ஆத லால் நாட்டின் விசேட நிலைமைக்கு ஏற்றபடி பெருந் தொழில்கள் பலவற்றை அரசாங்கம் மேற்கொள்வது இங்கு அவசியமாகின்றது. பொருள்களை உற்பத்தி செய்வோர் கையிலேயே அவைகளின் விநியோகமும் அமையும். தேசிய வருமானம் சிலரிடத்தில் குவிந்து விடாமல், பரவலாகப் பிரிவதற்கும் அரசாங்கம் தொழில்களைத் தேசிய உடைமையாக வைத்திருத்தல் நலமாகும். தேசிய உடைமையாக்குதல் மட்டுமே ஸோஷலிஸம் ஆகிவிடாது. முதலாளித்துவ நாடுகளி லும் சில தொழில்களைத் தேசியமாக்குதல் வழக்கமா யுள்ளது. உள்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தி, வெளிப் பகையால் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கடமையாக நெடுங் காலம் உலகில் இருந்து வந்தது. அரசாங்கம் தன் போலீஸை மட்டும் வைத்துக் கொண்டிருக்கட்டும்; ஆளுல் மற்ற விஷயங்களில் கைகளைக் கட்டிக்கொண்டு துங்கட்டும் என்று ஒரு பொருளாதார நிபுணர் கூறி யுள்ளார். மற்ருெருவர், "அரசாங்கம் தொழில்களை J &