பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அரசியல், பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குபவை மிகச் சில கட்சிகளேயாம்.

பிரிவினைக் கட்சிகள் மேலோங்கி, மத்திய சர்க்காரின் செல்வாக்கு குறையுமென்று சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும். அத்துடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனக்கு ஆதரவாயிருக்கு மென்றும் அது நம்பியிருந்திருக்கும்.

நாம் எவ்வளவுதான் அமைதியாக ஒதுங்கியிருக்க நினைத்தாலும், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் திடீர் திடீரென்று ஏற்படும் அரசியல் மாறுதல்களும், புயல்போன்ற பிரசாரங்களும், ஆட்சியிலுள்ளவர்களின் செயல்களும் நம்மை மிகவும் பாதிக்கின்றன. பாகிஸ்தானும் ஒன்றாக இல்லை. மேற்குப் பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தான் ஆக இரண்டு இருக்கின்றன. இந்தியாவுக்கும் அவைகளுக்கும் இடையில் திறந்த சமவெளியாக ஆயிரக்கணக்கான மைல் நீளமுள்ள எல்லைகளிருக்கின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே, இரு நாடுகளுக்கும் நன்மையான நிரந்தரமான உடன்பாடு அவசியம். அதற்குப் பாகிஸ்தானின் தலைவர்கள் நம்முடன் இணங்கி வரவில்லை. சீனா அவர்களைப் பிடித்து நன்கு பயன்படுத்திக் கொண்டது. சீன-பாகிஸ்தான் உறவில் பாகிஸ்தான் சீனாவின் வால் பிடிக்க இசைந்துவிட்டது.

நாம் சுதந்தரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியில், நாட்டின் வட எல்லைப் பாதுகாப்பு எளிதாயிருந்தது. அப்போது இமயமலைச் சாரலில் வட மேற்கிலுள்ள கைபர் கணவாயை மட்டும் பாதுகாப்பது அவசியமாயிருந்தது. ஆனால் இப்போது நமக்கு வடக்கே சீனர்கள் வந்து அமர்ந்து, நாள்தோறும் ராணுவத் தளவாடங்களையும் படைகளையும் பெருக்கிக்

82