பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 தன்னைப் பற்றிப் பாடம் கற்றுக்கொள்ளுமென்று சீனா எண்ணியிருக்கக்கூடும். ஐரோப்பாவில் மட்டும் ரஷ்யா தன் ஆதிக்கியத்தை வைத்துக் கொண்டு, ஆசியாவில் தானே தலைமையிலிருக்க வழி செய்து கொள்ள வேண்டுமென்பது அதன் நோக்கம்.

இந்தியாவைத் தான் தாக்கும் திறமையைக் கண்டு ஆங்கிலேயரும் போர்த்துகீசியரும் விழிப்படைந்து, முறையே தங்களிடமுள்ள ஹாங்காங் தீவையும், மாக்கோ துறைமுகத்தையும் தன்னிடம் மீண்டும் கொடுத்துவிட வழி பிறக்குமென்று சீனா எண்ணியிருக்கலாம். சீன நாட்டைச் சேர்ந்த இந்த இரண்டு இடங்களும், ஃபார்மோஸா தீவுமே இன்னும் சீன இராஜ்யத்தோடு சேர்க்கப் பெறாமல் எஞ்சியுள்ளன.

ஆசியக் கண்டத்தில் மட்டுமன்றி, ஆப்பிரிக நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் புரட்சிகளையும் கலகங்களையும் கம்யூனிஸ்ட் சீனா தூண்டி விட்டுக் கொண்டேயிருக்கின்றது. அந்நாடுகளெல்லாம் அதன் வல்லமையையும் பெருமையையும் உணர்ந்து கொள்ள இந்தியப் போர் ஒரு வாய்ப்பாகும் அல்லவா!

ஜப்பான் தான் முன்பு பிடித்து வைத்துக்கொண்டிருந்த மஞ்சூரியாவில் ஏராளமான விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், உலோகச் சுரங்கங்கள் முதலியவற்றை அமைத்திருந்தது. சென்ற உலகப் போருக்குப்பின் அது மஞ்சூரியாவைச் சீனாவிடம் ஒப்படைக்க நேர்ந்தது. எனவே கோடிக்கணக்கில் பணம் செலவிட்டுத் தான் வளப்படுத்திய நாட்டில் ஜப்பான் மீண்டும் கண் வைத்தல் இயல்பு. அந்த ஆசை என்னவாகும் என்பதற்கு இந்தியாமீது சீனப் படையெடுப்பு ஒர் எச்சரிக்கையாகும்.

10. சமாதான சக வாழ்வு என்று சீனக் கம்யூனிஸ்ட் சர்க்கார் கூறிவந்தது சீனவில் கம்யூனிஸ்ட்

62