பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திடீர் திடீரென்று நாட்டிலும் நகரங்களிலும் புகுந்து தாக்கி வந்தனர். எங்கும் பயங்கர நிலை நிலவியிருந்தது. ஆங்கிலேயர் அந்நாட்டை ஆள்வதால்தான் தாங்கள் கலகம் செய்வதாகக் கம்யூனிஸ்டுகள் சொல்லி வந்தனர். ஆங்கிலப் படைகளும், மலாய் மக்களும் சேர்ந்து நாடு முழுதும் ஒற்றுமையாகி, கம்யூனிஸ்டுகளைத் தாக்கி ஒடுக்கிவிட்டனர். கம்யூனிஸ்டுகளுக்கு உதவியாயிருந்த மலாயில் வாழ்ந்து வந்த சீனர்கள் வெகு தூரத்திற்கு அப்பால் தனியிடங்களில் ஒதுக்கிவைக்கப்பட்டனர். 1957-இல் மலாய்க்குச் சுதந்தரம் கிடைத்துவிட்டது. அதன் பின்னரும் கம்யூனிஸ்டுகள் செய்து வந்த கலகங்களைப் புதிய மலாய் அரசாங்கம் அடக்கி வெற்றி பெற்றது அதிசயமான ஒரு சரிதை. இப்பொழுது மலாசியா என்ற பெரிய தனி ராஜ்யம் அமைந்துள்ளது. ஆனால் சிங்கப்பூர் தனிச் சுதந்தரப் பிரதேசமாக விளங்குகின்றது.

திபேத்து நாடு பலியானது!

உலக நாடுகளிடையே அமைதியே உருவாக விளங்கும் திபேத்து நாட்டின் மீது 1950-இல் கம்யூனிஸ்ட் சீன படையெடுத்துப் பாய்ந்தது. திபேத்து வடதிசையில் நமக்கு அடுத்துள்ள நாடு. பூவுலகிலேயே பெரிதான இமய மால்வரையின் தென் சாரலில் நமது காஷ்மீரைச் சேர்ந்த லடாக் பகுதியும், வடகிழக்கு எல்லைப் பிரதேசமும் இருக்கின்றன: வட சாரலில் திபேத்து உள்ளது. திபேத்திய மக்கள், முற்காலத்தில் மகாவீரர்களாயிருந்த போதிலும், இப்போது பரமசாதுக்கள். அவர்கள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஈ, எறும்புகளைக் கூடக் கொல்ல மனமில்லாதவர்கள். அவர்களுடைய மன்னரும் மதத்தலைவருமான

46