பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாபெரும் தடாகத்திற்கு வடபால் உள்ளது. அதன் சுற்றளவு 32 மைல், உயரம் 22,028 அடி. கண்டால் கண்குளிரும், எண்ணினால் உள்ள முருகும் அதன் திருக்கோலத்தைத் தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய யாத்திரிகர்கள் ஆண்டுதோறும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் புனித யாத்திரை செய்வதுண்டு. இந்திய எல்லையிலுள்ள அல்மோராவிலிருந்து கயிலாயம் போய்வர 500-மைல் நடக்கவேண்டும். சுமார் ஏழு வாரங்களில் இந்த யாத்திரையை முடிக்கலாம். காஷ்மீரிலிருந்தும் திபேத்திலிருந்தும் வேறு பாதைகளும் கயிலைக்குச் செல்கின்றன.

வெண்மையான உறை பனியால் மூடப்பெற்று, மோனத்தில் அமர்ந்துள்ள சிவபெருமானகக் காட்சியளிக்கும் கயிலையைப் பற்றி,

‘காவும் பொழிலும் கடுங்கற்சுனை சூழ்
கயிலைமலையாரே ’

என்றும்,

‘கண்ணுய் உலகுக்கு கின்ருய் போற்றி !
கயிலை மலையானே, போற்றி, போற்றி!’

என்றும், சம்பந்தரும் நாவுக்கரசரும் போற்றிப் பாடியுள்ளனர். கயிலையைச் சிவவடிவாகவும், மானஸ்சரோவரைச் சக்தி வடிவாகவும் வழிபடுவது மரபு. கயிலை மலையிலிருந்து மானஸ்சரோவர் 40 மைல் தொலைவிலுள்ளது. இத்தடாகத்தின் பரப்பு 200 சதுர மைல். இது கடல் மட்டத்திற்கு 15,000 அடி உயரே அமைந்துள்ளது. வடகோடியிலுள்ள கயிலைமால் வரையையும், கடல் போன்ற இத்தடாகத்தையும் இந்தியாவின் தென்கோடியிலுள்ள இந்துக்களும்கூட இறைவனாகவும் இறைவியாகவும் தொன்று தொட்டு இன்றுவரை பக்தியுடன் பரவி வருகின்றனர்.

6