பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யும், தஸ்தாவேஜுகளையும், உலகம் முழுதும் இதுவரை ஒப்புக்கொண்டுள்ள வரலாறுகளையும் எடுத்துக் காட்டினோம். இவைகளில் எதனையும் சீனா மறுக்க முடியவில்லை, மறுக்க வழியுமில்லை. ஆயினும், சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் புதிதாகக் கள்ளத்தனமாகத் தயாரித்து வைத்துக் கொண்டிருக்கும் தரைப்படங் களையே தனக்கு ஆதாரமாகக் காட்டி வருகின்றது. மேற்கொண்டும் நாம் சமரசம் பேசத் தயாராயிருந்தோம். அந்நிலையில்தான் சீனா போர் தொடுத்தது.

ஆக்கிரமிப்புப் போரின் காரணங்கள்

சீன நம் எல்லைகளைத் தாண்டி ஏன் ஆக்கிரமிப்புப் போரில் இறங்கியுள்ளது என்பது கடவுளுக்கும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழவுக்கும் மட்டுமே தெரியும். ஆயினும் பலர் பலவிதமாக யூகம் செய்து கூறுகின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கமோ தான் ஆக்கிரமிக்கவேயில்லை என்றும், இந்தியாவே தன் மீது ஆக்கிரமித்தது என்றும், தான் தற்காப்புக்காகவே போராடியது என்றும் பிதற்றி வந்தது. ஆனால் கடைசியாகத் திரு. மாக்டொனல்ட் [1]என்பவரிடம், இந்தியா போர் தொடுக்கப் போகின்றது என்று கருதியே சீனா முன்கூட்டிப் படையெடுக்க நேர்ந்தது என்று சீன அதிகாரிகள் கூறினர். ஆயினும் உண்மையான காரணங்களைத் தெரிந்துகொள்ள நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம்.


  1. இந்தியாவில் பழைய பிரிட்டிஷ் ஹைகமிஷனராக் இருந்தவர் திரு. மால்காம் மாக்டொனல்ட்.

54