பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 யிருந்தனர். இயந்திர சாதனங்களைக்கூட அவர்கள் வேண்டிய இடங்களுக்குக் கொண்டுவர முன்னதாகவே தக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

படைகளின் வலிமை

அக்டோபர் மாதம் 12 நாட்கள் நடந்த போரிலிருந்து நமக்குப் பல விஷயங்கள் தெரியவந்தன. ‘வெறும் பாறைகளுக்காகவா சீனர்கள் போரிடுவார்கள் ?’ என்று கருதி வந்த நமக்கு அது தெளிவுண்டாக்கிவிட்டது. அவர்கள் போரிட்டதோடு, ஆயிரக் கணக்கான வீர இந்தியர்களின் உதிரத்தையும் பெருக்கிவிட்டார்கள். இருதிறத்துப் படைகளுக்கும் பெரும் வேற்றுமை இருந்தது. சீனப் படைகளில் 1, 10, 000 சிப்பாய்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருள் ஒருவராயும், பல கம்யூனிஸ்ட் போர்களை நடத்தியவராயும் விளங்கிய 54 வயதுடைய தளபதி சாங் குவோஹவா அவர்களுக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தார். சீனப் படையிலிருந்த சிப்பாய்கள் மத்திய சீனாவைச் சேர்ந்த வாலிபர்கள், 3 வருடக் கட்டாய இராணுவ சேவைக்காக அழைத்துவரப்பட்டவர்கள். ஆயினும் மற்ற இராணுவ அதிகாரிகள் பெரும்பாலும் கொரியா போரில் போராடிப் பயிற்சி பெற்றவர்கள். சீனர்கள் கொண்டுவந்திருந்த பீரங்கிகள், டாங்குகள், விமானங்கள் ஆகியவை பெரும்பாலும் ஸோவியத் ரஷ்யாவில் தயாரானவை. மற்றத் துப்பாக்கிகளும், சிறு இயந்திரத் துப்பாக்கிகளுமே சீனவில் தயாரானவை.

இந்தியப் படைகளில் 5,00,000 வீரர்கள் இருந்தனர். ஆனால் அவர்களிலே 1,00,000 பேர்களுக்குக் குறைவாகவே எல்லைப் போர்க்களங்களுக்குச் சென்

98