பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வைப் போலவே அதற்கு ஆசை ஊட்டுவது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நேரடியாகப் படையெடுத்துச் செல்லாமல், ஆங்காங்கு வசிக்கும் சீனர்களைக் கொண்டே பீகிங் அரசாங்கம் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் எண்ணியிருக்கின்றது.

ஆசியாவில் தன் ஆதிக்கிய அபிவிருத்திக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டைப் பார்க்கினும் இந்தியாவே பெரிய தடையாக நிற்பதாகக் கம்யூனிஸ்ட் சீனா கருதுகின்றது. ஆதலால் இந்தியாவிடம் தன் வல்லமையைக் காட்டவும் அது தொடங்கியுள்ளது.

இவ்வாறு வெளி ஆதிக்கியத்திலேயே நாட்டமிருப்பதால், சீன அரசாங்கம் நாட்டு மக்களின் பசி, பட்டினி முதலியவற்றை அதிகமாய்ப் பொருட்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. என்ன செலவானலும், இராணுவ வசதிகளைப் பெருக்கிக் கொண்டேயிருப்பது அதற்கு அவசியம். இரண்டாவது உலகப் போருக்கு முன் ஜப்பானும் இப்படித்தான் செய்து வந்தது. ஜப்பான் மேலே நாடுகளைப் பார்த்து, வெகு விரைவிலே முதலாளித்துவ முறையில் தொழில்களே வளர்த்துக்கொண்டது. அதே முறையில் இராணுவத்தையும் பலப்படுத்திக்கொண்டது. முடிவில் அது போரில் இறங்க வேண்டியதாயிற்று. ஆதிக்கிய வேட்டையில் சீனா இறங்குவதற்கு வெறும் கம்யூனிஸம் மட்டும் போதாது; ஆகவே கம்யூனிஸத்தின் பெயரால் மற்றும் தேவையான கொள்கைகளேயும் மாஸே—துங் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி தம் தோழர்களுக்கும் மக்களுக்கும் புகட்டிவருகிறார்.

கம்யூனிஸமும் தேசியமும்

‘ஸன் யாட்-ஸென்னுடைய 40 வருட அனுபவமும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 28 வருட அனுபவமும்

165