பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நடந்து வருகின்றது. பிலாய் தொழிற்சாலைக்கு ஸோவியத் ரஷ்ய நிபுணர் களும், துர்க்காபூர் தொழிற்சாலைக்கு:ஆங்கில நிபுணர் களும் உதவி வருகின்றனர். இத் தொழிற்சாலைகளுக் குத் தேவைப்படும் எஞ்சினியர்கள் சுமார் 2,000 பேர் கள்; தொழில் நுணுக்கம் தெரிந்த தொழிலாளர்கள் சுமார் 19,000 பேர்கள். ரூர்கேலா, துர்க்காபூர் தொழிற்சாலைகளில் ஒவ் வொன்றும் 1963, மார்ச் முடிவுக்குள் 10 லட்சம் டன் உருக்குக் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. :பிலாயில் திட்டப்படி உற் பத்தியாக வேண்டிய 10 லட்சம் டன்னுக்குக் கூடுத லாகவே 1962-இல் உற்பத்தி செய்யப்பெற்றது. ரூர் கேலாவில் அடிக்கடி இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு உற்பத்தி குறைவதைப் பற்றிப் பரிசீலனை செய்து, உற்பத்தியைப் பெருக்க மேலும் புதிய இயந் திரங்கள் வரவழைக்க ஆலோசிக்கப் பெற்று வரு கிறது. துர்க்காபூர் 1963-இல் தனக்குரிய பகுதியை உற்பத்தி செய்தது. பிலாயில் வருடத்திற்கு 10 லட் சம் டன் உற்பத்தி செய்வதை 25 லட்சம் டன்னுகக் கூட்டுவதற்குத் திட்டம் தயாராகியுள்ளது. பிலாய் தொழிற்சாலைக்கு முன்னல் செலவான சுமார் ரூ. 200 கோடியுடன், அபிவிருத்திக்கு இன்னும் ரூ. 140 கோடி செலவாகுமென்று உத்தேசிக்கப்படுகின்றது. உருக்கு உற்பத்திக்காகப் பொதுத் துறையிலும், தனியார் துறையிலும் இதுவரை சுமார் ரூ. 1,000 கோடி மூலதனம் போடப் பெற்றிருக்கின்றது. இத் தொழிலை மேலும் வளர்ப்பதற்காக தேசிய உற்பத்திக் கவுன்சிலின் குழு ஒன்று ரஷ்யாவுக்கும், ஸ்ெக்கோஸ் லோவேகியாவுக்கும் சென்று பார்வையிட்டு வந்திருக் கின்றது. குழுவின் தலைவரான திரு. லால்காகா, 287