பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய சீனா

‘சீன மக்கள் முற்காலத்தில் பெரும்பாலும் அமைதியாக வாழ்க்கை நடத்திவந்தவர்கள். இப் பொழுதும் அப்படியே இருக்கிருர்கள். அவர்க ளுடைய நாகரிகமும் வாழ்க்கைத் தத்துவமும் முழுதும் சாந்தியைத் தழுவியவை.’

— ஜவாஹர்லால் நேரு [1]





நாடு

சீனா பழம் பெருநாடு. அது நாலாயிரம் ஆண்டுகளாகத் தொடர்புள்ள சரித்திரத்தைக் கொண்டது. அத்தனை ஆண்டுகளாகப் பல சக்கரவர்த்திகள் அதனை ஆண்டுவந்தனர். ஹியா, செள, சின், ஹான், டாங் லாங், மங்கோலியர், மிங், மஞ்சூ ஆகிய ஒன்பது வமிசங்களைச் சேர்ந்த 184 சீனச் சக்கரவர்த்திகளின் ஆட்சியைப் பற்றிய விரிவான சரித்திரங்கள் இருக்கின்றன. அவர்களிற் பலர் சீன நாட்டிலேயே தோன்றியவர்கள்; சிலர் வெளியிலிருந்து வந்து வெற்றி கொண்டவர்கள். மங்கோலியரும், மஞ்சூக்களும் வெளியார்கள். அரச வமிசங்களிலே கடைசியாக ஆண்டுவந்தவர்கள் மஞ்சூ வமிசத்தினர். 1912 ஆம் ஆண்டில் அவர்களோடு முடியாட்சி முடிந்து, சீனவில் மக்களாட்சியாகிய குடியரசு நிறுவப்பெற்றது.

பழைய சீனாவின் நிலப்பரப்பு 43,14,097 சதுர மைல். ரஷ்யாவுக்கு அடுத்தபடியான பெரிய நாடு


  1. ‘உலக சரித்திரக் காட்சிகள்’ என்ற ஆங்கில நூலில்

114