பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 விட்டது’ என்று சீனப்பத்திரிகைகள் மூலம் சுடச்சுடப் பதிலளித்தார். சில சமயங்களில் குருஷ்சேவ் செக் கோஸ்லோவேகியத் தலைவர் மூலம் தாக்கினார்; மாஅல்பேனியத் தலைவர் மூலம் தாக்கினார். கம்யூனிஸ்ட் நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாடாகக் கூடி இக்கொள்கை வேற்றுமைகள் பற்றி விவரமாக விவாதிக்க வேண்டும் என்று சீனா கோரிற்று. குருஷ்சேவ் சீன-ரஷ்யக் கட்சிகள் முதலில் நேரிலே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறினர். இவையெல்லாம் வெளியுலகுக்காக நடித்துக் காட்டப்பெற்ற நாடகங்கள் அல்ல. உண்மையிலேயே இரு நாடுகளுக்குள்ளும் கொள்கை வித்தியாசங்கள் விளைந்து விட்டன. வெளிப்படையாகச் சண்டை போட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு அவை அவ்வளவு முக்கியமானவையா ? அவ்வாறில்லையென்றால், இரு பெரும் கம்யூனிஸ்ட் நாடுகள் உலகறிய மோதிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

48 ஆண்டுகளாகத் தொழில்களிலும், வலிமையிலும் வளர்ந்தோங்கியுள்ள ஆதிக் கம்யூனிஸ்ட் நாடாகிய ஸோவியத்தைப் புதிய கம்யூனிஸ்ட் நாடான சீனா எதிர்த்துப் பேசத் துணிந்தது வியப்புக்குரிய விஷயமே. ரஷ்யக் கொள்கையில் தவறிருந்தாலும்கூட, தன் அரசியல், பொருளாதாரத் தேவைகளுக்காகச் சீனா அடக்கத்துடன் மெளனமாயிருந்துவிடக் கூடாதா ? ரஷ்யாவைத் தட்டிக் கேட்கக்கூடிய வல்லமை தனக்கு வந்து விட்டதாகச் சீனா கருதியது என்பது இதிலிருந்து தெளிவாய்த் தெரிகின்றது.

கியூபா நிகழ்ச்சி

கியூபா விஷயமாகச் சீனாவும் ரஷ்யாவும் பூசலிட்டுக் கொண்டன. சுமார் அறுபது லட்சம் ஜனத்தொகையுள்ள கியூபா பஸிபிக் கடலில் அமெரிக்க ஐக்கிய

186