பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அஞ்சிய ஜெர்மன் படையினரை எதிர்த்து, அவர்களில் பலருடைய குடல்களை யெடுத்து மாலைகளாகக் கழுத்தில் போட்டுக் கொண்டவர்களின் வமிசத்தைச் சேர்ந்த பலர் அதிலுள்ளனர். 20-சீன சிப்பாய்களுக்கு ஒர் இந்திய சிப்பாய் நிகரென்று நம் முன்னாள் சேனாபதி தளபதி கரியப்பா கூறியுள்ளார்.

சீனத் தலைவர் மாஸே-துங் அமெரிக்க ஐக்கிய நாட்டை வெறும் ‘அட்டைப் புலி’ என்று இடைவிடாமல் பரிகாசம் செய்து வருகிறார். அந்த அட்டைப் புலிக்கு அணு (குண்டு)ப்பற்கள் இருக்கின்றன என்று ரஷ்யத் தலைவர் குருஷசேவ் ஆப்பறைந்தது போல் பதிலளித்தார். மா தம்மைச் சீனத்துச் சிங்கமென்று கருதி மமதையோடு அடிக்கடி உறுமுகிறார். ஆனால் அவர் சிங்கத்தோல் போர்த்திய கழுதைதான் என்பதை விரைவிலே உலகம் கண்டு கொள்ளும்.

போர் செய்யும் கம்யூனிஸ்ட் சீன அரசாங்கம் வேறு, சீன மக்கள் சமுதாயம் வேறு என்றும், அரசாங்கத்தை எதிர்ப்பதில் மக்களைத் துவேஷிக்கக் கூடாது என்றும் நம் தலைவர் நேரு அடிக்கடி எடுத்துக் காட்டினர். ஆனல் ‘அரசு-மக்கள்’ என்ற வேறுபாட்டைப் பொதுமக்கள் பிரித்துப் பார்ப்பது அரிது. இதய உணர்ச்சி மேலிட்டபொழுது அந்த ஆராய்ச்சிக்கு இடமிராது. போருக்குப் பின்னல் பாரத நாட்டில் சீனர்களைப் பற்றி மக்கள் மிகக் கேவலமாகவே எண்ணுகிறார்கள். புதுடில்லி ஊர்வலங்களில், ‘எலி தின்னிப் பசங்களே, வெளியேறுங்கள்!’ என்று ஜனங்கள் கூவிச் சென்னார்களாம். சீனப் பிரதமர் இந்தியனுக்கு விருந்தளிக்கையில், ‘பாம்பு ரோஸ்ட் வேண்டுமா? வேண்டா மென்றால், பல்லி ரோஸ்ட் சாப்பிடு! பாம்புக் கறி, பல்லி ரோஸ்ட், தேள் கூட்டு, கரப்பான் பொறியல். . .’ என்றெல்லாம் அடுக்கிக் கூறிய

73