பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். வல்லரசாகிய ஜப்பானை எதிர்த்ததில் போதிய உணவும், உடைகளும், ஆயுதங்களும் இல்லாத சீனப் போர்வீரர்கள், நாடு நகரங்களை யெல்லாம் இழந்து பின்னேறிச் சென்றுகொண்டிருந்த போதிலும். இறுதி வெற்றி தங்களுக்கே என்பதில் அவர்களுக்குச் சந்தேகமேயில்லை. மக்களும் உறுதியோ டிருந்தனர்.

சீன மக்களின் துயரங்களைக் கண்டு இந்தியா முழுவதும் அவர்களுக்கு அனுதாபம் காட்டி வந்தது. 1938இல் பண்டித ஜவாஹர்லால் நேரு பாரிஸ் நகரில் உலகறியக் கூறிய மொழிகள் இவை: ‘சரித்திரத்தின் உதய காலத்திலிருந்தே ஆயிரக்கணக்கான பாசங்களால் நம்முடன் பிணைக்கப் பெற்றுள்ள சீன மக்களுடன் ஒத்துழைக்க நாம் தோழமையோடு கரங்களை நீட்டுகிறாேம். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்களில் நாமும் பங்கு கொள்கிறாேம். அவர்களுடைய துயரம் நம்மையும் வேதனைப் படுத்துகின்றது. நமக்கு எத்தகைய நன்மையோ தீமையோ ஏற்பட்ட போதிலும், நாமும் அவர்களும் ஒன்றியே நிற்போம்!’

ஜப்பான் ஹிட்லருடன் சேர்ந்து நேசநாடுகளை எதிர்த்துப் போரிட்டதால், இறுதியில் அமெரிக்கா ஹிரோஷிமா, நாகலாகி என்ற இரு ஜப்பானிய நகரங்களையும் அணுகுண்டுகள் வீசி அழித்துவிட்டது. 1945, ஆகஸ்டு 11-ந்தேதி ஜப்பான் சரணடையும்வரை, அந்நாட்டில் பெரிய நகரங்களும், துறைமுகங்களுமாக 88 நகரங்கள் குண்டுகளால் எரிந்து சாம்பலாகிக் கிடந்தன.

போர் முடிவில் சீனா தான் இழந்த பிரதேசங்கள் யாவற்றையும் ஜப்பானிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

131