பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வேண்டும். அவைகள் காலி செய்யும் பிரதேசத்தில், இரு பக்கத்து உத்தியோகஸ்தர்களைத் தவிர எந்தப் படைகளும் இருக்கக் கூடாது.

2. கிழக்குப்பகுதியான நேபாவில் 1962, செப்டம்பர் 8-ந் தேதிக்கு

முன்பு இருந்தபடி மக்மகான் கோட்டுக்கு வடபுறம் சீனப் படைகளும், தென்புறம் இந்தியப் படைகளும் இருந்துகொள்ள வேண்டியது. தக்லா குன்றுப் பகுதி, லாங்ஜூ ஆகிய இரண்டு பிரதேசங்களைப் பற்றி மட்டும் இரு நாடுகளும் கலந்து ஒரு முடிவு செய்து கொள்ளவேண்டும்.

3. நடுப் பகுதியில் செப்டம்பர் 8-ந் தேதிக்கு முன்னிருந்த நிலையே இருந்து வரவேண்டும்.

ரபிதம மந்திரி நேரு பார்லிமென்டில் பேசும் பொழுது, இந்திய அரசாங்கம் சமாதானத்திற்காகக் குறித்த நிபந்தனைகளை ஒட்டியே கொழும்புப் பிரேரணைகள் இருப்பதாலும், சில அம்சங்களில் நமக்கு நன்மையான அம்சங்கள் கூடுதலாக இருப்பதாலும், அவைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று விளக்கி யுரைத்தார். இந்தியப் பார்லிமென்டும் பிரேரணைகளை அங்கீகரித்தது.

ஆயினும் சீனா அவைகளே முழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை முதலில் அது கொள்கை அளவில் கொழும்புப் பிரேரணைகளை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிற்று; பின்னல் சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத் தலைவரும், பிரதமரும், மற்றாேரும் பல சமயங்களில் அவைகளை மறுத்துப் பேசியுள்ளனர். தங்களுக்கு எவரும் நிபந்தனைகள் போடக்கூடாதென்றும், கொழும்பு மகாநாட்டின் முடிவுகள் நீதிபதி தீர்ப்புக் கூறுவதுபோல இருப்பதாகவும், பலவிதமாக அவர்கள் கூறியுள்ளனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ கொழும்புப் பிரேரணை

112