பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அணுச்சக்தி ஏவுகணைகளை அனுப்பி, அங்கே அவைகளைப் பல இடங்களில் ரஷ்யா சேர்த்து வைத்திருந்தது. இதனால் மேற்கொண்டு ரஷ்ய ஏவுகணைகள் முதலியவை கியூபாவுக்கு வராமல் தடுக்கவேண்டுமென்று அமெரிக்கா துணிந்து முடிவுசெய்தது. அங்குச் செல்லும் கப்பல்களைத் தடுத்துச் சோதனை செய்யும்படி அமெரிக்க ஜனாதிபதி கடற்படைக்கு உத்தரவிட்டார். ரஷ்யாவும் துணிந்து கப்பல்களைக் கியூபாவுக்கு அனுப்பத் தீர்மானித்து, அமெரிக்காவுக்குக் கடுமையான எச்சரிக்கையும் செய்தது. இரு பக்கத்திலும் பயங்கர மான போருக்கு ஆயத்தங்கள் செய்து முடிக்கப்பெற்றன. ஏராளமான ஆயுதங்களுடன் 25 ரஷ்யக் கப்பல்கள் கியூபாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. கியூபா பிரதமர் காஸ்டிரோ அமெரிக்க முற்றுகையைத் தகர்த்தெறியப் போவதாக ஆர்ப்பரித்துக்கொண் டிருந்தார்.

சீனாவின் சமாதான வேட்டு

இந்த உலக நெருக்கடியின் நடுவில் சீன அரசாங்கம் இந்தியாவுக்கு மூன்று நிபந்தனைகளைக் கொண்ட ஒரு சமாதானக் கோரிக்கையை அனுப்பி வைத்தது. அந்த மூன்று நிபந்தனைகள் இவை :

1. சீன - இந்திய எல்லைப் பிரசினையை அமைதியான முறையில் பேசித் தீர்த்துக்கொள்வதாக இருதிறத்தாரும் உறுதி செய்யவேண்டும்; அவ்வாறு தீர்த்துக் கொள்ளும்வரை, இப்போது எல்லைப்புறம் முழுதிலும் சீனாவிடம் உள்ள இடங்கள் அதனிடத்திலும், இந்தியா வசம் உள்ள இடங்கள் இந்தியாவிடமும் இருந்து வர வேண்டுமென்பதை இரு கட்சியினரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இரு ஆதிக்கியப் பகுதிகளுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோட்டிலிருந்து இரு கட்சிப் படைகளும் 20

92